சென்னை: 2030-க்குள் அவற்றை நனவாக்க நான் பாடுபடுவேன்! இதுவே என் வாக்குறுதி! உங்கள் கனவ சொல்லுங்க திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் மேலும் தொடர ஓரணியில் நின்று வெல்வோம் என திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்களின் தேவைகளைக் கேட்டு, அதனைத் திட்டங்களாகக் கொடுப்பதே மக்களாட்சியின் உண்மையான நோக்கம்; அதனை நிறைவேற்றுவதே #DravidianModel! “#உங்க_கனவ_சொல்லுங்க” என்று உங்கள் வீடு தேடி வரவுள்ள எங்களது Team-இடம் உங்கள் கனவைப் பகிர்ந்துகொள்ளுங்கள். 2030-க்குள் அவற்றை நனவாக்க நான் பாடுபடுவேன்! இதுவே என் வாக்குறுதி! உங்கள் கனவு நனவானால்; தமிழ்நாட்டின் கனவுகள் நனவாகும்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைமை கழகம் தனது சமூக வலைத்தளம் பதிவில்,. திராவிட மாடல் ஆட்சியில் எட்டுத்திக்கும் மகிழ்ச்சியின் ஓசைகள் ஒலிக்கிறது. திராவிட நாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் மேலும் தொடர ஓரணியில் நின்று ஒன்றாக வெல்வோம். தொடரட்டும் ஸ்டாலின்! வெல்லட்டும் தமிழ்நாடு! வெல்வோம் ஒன்றாக, உங்க கனவை சொல்லுங்க என கூறியுள்ளது.‘
[youtube-feed feed=1]