சென்னை: தமிழ்நாடு அரசு திடீரென நேற்று (பிப்ரவரி 13) மகளிர் உரிமைத் தொகை 5000 ரூபாய் வரவு வைத்துள்ளது குறித்த எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்துக்கு நான் சட்டமன்றத்தில் பதிலளிக்கிறேன் என அமைச்சர் வேலு தெரிவித்து உள்ளார்.
திமுக அரசின் திட்டங்களை, எதிர் கட்சித் தலைவர் அவர் பாராட்ட வா போகிறார், அவருக்கு நான் சட்டமன்றத்தில் பதிலளிக்கிறேன் என்று அமைச்சர் எ.வ வேலு தெரிவித்‘து உள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் நாளை (14) திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு நடைப்பெற உள்ள நிலையில் அதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகளை இன்று (13) பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, அவர், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில், நாளை திமுக தலைவர் ஸ்டாலின் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
இந்த மாநாட்டிற்கு, கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதியே மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் அனுமதிகோரப்பட்டது, அதன்படி காவல்துறையினரின் 17 நிபந்தனை கள் படி, 45 ஏக்கரில் பயிற்சி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரக்கோணத்தில் தொடங்கி சேலம் மாவட்டத்தில் உள்ள 47 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 1லட்சத்து 50 ஆயிரம் BLA2, BLC, BDA நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்மாநாட்டில் பங்கேற்க உள்ளவர்களுக்கு, 6 லட்சம் தண்ணீர் பாட்டில்கள், பல்வேறு சிற்றுண்டிகள், சத்தாண உணவுகள் அடங்கிய பைகள் தொகுதிவாரியாக வழங்கப்பட உள்ளது.
மேலும் 400 மொபைல் கழிவறைகள், தனியாரிடம் அனுமதி பெற்று 160 ஏக்கரில் 7 இடங்களில் வாகனங்கள் நிறுத்தும் இடம், மாநாட்டிற்கு வருகை புரியவர்களுக்கு சிகிச்சை அளிக்க தற்காலி மருத்துவமனை, 25 மருத்துவர்கள், 50 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் அரசு என்பது வேறு அரசியல் என்பது வேறு என அனைத்து துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ்களை வாங்கிதான் இந்த மாநாட்டை நடத்துகின்றோம், தலைவரை பார்த்த உத்வேகத்தில், வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தலில் தீவிரமாக உழைப்பாளர்கள் எனப்பேசினார்.
மேலும் பேசிய அவர் மகளிர் உரிமைத் தொகை 5000 ரூபாய் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சன கேள்விக்கு பதிலளித்த அவர். எதிர் கட்சித் தலைவர் அப்படி இருக்கும்போது அவர் பாராட்ட வா போகிறார், அவருக்கு நான் சட்டமன்றத்தில் பதிலிக்கின்றேன், தவெக சார்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு என்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.
26 ஆண்டு களமாக மாவட்ட செயலாளராக உள்ளேன் மீண்டும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி நிச்சயம் முதலமைச்சர் தலைவர் தான் மீண்டும் 2026 அரியணையில் ஏறப்போகிறார்.அதிமுக மனரீதியாக பொருந்தாத கூட்டணியாக உள்ளது. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் வழங்கப்படும் அதன் பின்னர் விருப்ப மனு பெறப்படும் என தெரிவித்தார்..