2019 மக்களவை தேர்தலில் போட்டியிடமாட்டேன்: பிரியங்கா காந்தி

Must read

டில்லி:

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்து உள்ளார்.

17வது பாராளுமன்றத்திற்கான மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், உ.பி. மாநில கிழக்கு பதிகு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து கட்சிப்பணிகளில் தீவிரக் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா கடந்த சில நாடகள் லக்னோவில் முகாமிட்டு கட்சிப்பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

இதற்கிடையில் பிரியங்கா காந்தி அவரை சந்தித்த உ.பி. மாநில காங்கிரஸ் தொண்டர்கள் அவரை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தி வருகின்றனர்.  லக்னோ மற்றும் புல்பூர் மக்களவை தொகுதி யில் அவர் போட்டியிட வேண்டும்  காங்கிரஸ் தொண்டர்கள் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் மிகுந்த, ஜவஹர்லால் நேரு போட்டியிட்ட தொகுதியான புல்புர் தொகுதியில் பிரியங்கா போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசிய பிரியங்கா,  இந்த ஆண்டு (2019) ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என  உறுதியாக தெரிவித்தார்.

நடைபெற உள்ள  நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து, அடுத்து  2022-ம் ஆண்டு  நடைபெற உள்ள உத்தரப்பிரதேச  சட்டப்பேரவைத் தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், உ.பி.யில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதில் தீவிர கவனம் செலுத்தப்போவதாகவும் தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து பேசியவர், தனது கணவர் ராபர்ட் வதேரா மீதான நடவடிக்கை போகும்வரை போகட்டும் என்றும்,  தன்னுடைய பணியை தான் தொடர்ந்து செய்வேன் என்றும் கூறினார்.

More articles

Latest article