டில்லி:

டில்லி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கும், துணை நிலை ஆளுநருக் கும் இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு இருவேறு தீர்ப்புகளை வழங்கி உள்ளது.

இதையடுத்து, முதல்வர் அதிகாரத்தின்படி அவர் செயல்படவும், கவர்னர் அதிகாரத்தின் படி அவர் செயல்படவும்  அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

டில்லி, புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில், மத்திய அரசு சார்பில் நியமிக்கப்படும் கவர்னர்கள்,  மாநில அரசுக்கு ஒத்துழைக்க மறுத்து வருகின்றனர். இதன் காரணமாக அதிகாரப் போட்டி நிலவி வருகிறது.

டில்லியிலும் ஆம்ஆத்மி அரசு அறிவிக்கம் மாநில அரசின் நலத்திட்டங்களக்க கவர்னர் ஒத்துழைக்க மறுப்பதால் இருவருக்கும் இடையே பிரச்சினை பூதாகரமானது. இதையடுத்து, கவர்னரின் அதிகாரம் குறித்து வழக்கு தொடரப்பட்டத. இந்த வழக்கை விசாரித்த  டில்லி உயர்நீதிமன்றம், அரசியலமைப்பு சட்டத்தின்படி மத்திய அரசால் நியமிக்கப்படும் துணை நிலை ஆளுநர்தான் அதிகாரம் இருப்பதாகவும்,  அவர் மாநில அரசு நிர்வாகத்தின் தலைவராக இருக்க முடியும் என்று கடந்த  2016 ஆண்டு தீர்ப்பளித்தது.

டில்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை  எதிர்த்து ஆம்ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தது. அதில்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்  மட்டுமே மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பது அவசியம். மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. சட்டம் ஒழுங்கு, நிலம், போலீஸ் ஆகியவற்றை தவிர்த்து மற்ற துறைகளில் முடிவுகள் எடுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் உண்டு. அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் மதிப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள், ஏ.கே. சிக்ரி தலைமையிலான 2 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 2 நீதிபதிகளும்  மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து டெல்லி அதிகார வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

நீதிபதி ஏ.கே.சிக்ரி அளித்த தீர்ப்பில், இணைச் செயலாளர் மற்றும் அந்த அந்தஸ்திற்கு மேல் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கே உண்டு  என்றும் இணைச் செயலாளர் அந்தஸ்திற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருவார் எனவும் கூறினார். அதேபோல ஊழல் தடுப்பு பிரிவு, விசாரணை ஆணையம் ஆகியவை யும் துணை நிலை ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும், காவல்துறை தொடர்பான அதிகாரங்கள் மாநில அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

ஆனால், மற்றொரு நீதிபதியான அசோக் பூஷண், சிக்ரியின் தீர்ப்புக்கு எதிராக மாறுப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.  இதன் காரணமாக இவ்வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த விவகாரம் ஏற்கனவே உள்ள அதிகாரத்தின்படி அவரவர் அதிகாரங்களின் படி பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.