தமிழக வளர்ச்சிக்கான நிதியைக் கேட்டுப் பெறுவேன் : துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்

Must read

சென்னை

நிதி அமைச்சர் மாநாட்டில் கலந்துக்கொள்ள டில்லி செல்லும் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

வரப்போகும் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார். இதில் கலந்துக் கொள்ள அனைத்து மாநில நிதி அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தில் தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் கலந்துக் கொள்கிறார்.

இதற்காகப் பன்னீர்செல்வம் இன்று சென்னையில் இருந்து டில்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.  அவர் அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார்

அந்தப் பேட்டியில்  பன்னீர் செல்வம்,”நான் நிதிநிலை அறிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள டில்லி செல்கிறேன்.  அந்த கூட்டத்தில் தமிழக வளர்ச்சிக்கான நிதியைக் கேட்டுப் பெற உள்ளேன்.

தற்போது குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது.  அதனால் அது தொடர்பாக எவ்வித கருத்தையும் கூற நான் விரும்பவில்லை”எனக் கூறி உள்ளார்.

More articles

Latest article