திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் அதிர்வலைகளை ஏற்படுத்திய தங்கக்கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் எழுதிய, நான் பார்வதி சிவசங்கர் என்ற வாழ்க்கை வரலாறு புத்தகம் தற்போது வெளியாகி உள்ளது. அதில், அவர் கூறியுள்ள குற்றச் சாட்டுக்கள், கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு ஆட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
“நான் சிவசங்கரின் ‘பார்வதி’,” என்று அவர் தனது சுயசரிதையான ‘சத்தியுடே பத்மவியூஹம்’ என்ற தலைப்பில், கரண்ட் புக்ஸ், நிறுவனத்தின் புத்தகத்தை ஸ்வப்னா சுரேஷ் அன்மையில் திருச்சூரில் வெளியிட்டார். அதில் தன்னுடன் நெருக்கமான இருந்த அரசியல்வாதிகள் மற்றும் நிர்வாகிகளின் தொடர்பை அவர் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
அதில், முன்னாள் தலைமைச்செயலாளர் என்னை திருமணம் செய்துகொண்டார் என்று கூறியுள்ள ஸ்வப்னா சுரேஷ், முன்னாள் அமைச்சர் தன்னை உல்லாசத்திற்கு அழைத்து தொல்லை கொடுத்தார் என்றும் கூறி உள்ளார். மேலும், அவர்கள் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க முடியும் என்று நினைத்து, என்னை நம்ப வைத்து ஆடியோ பதிவு செய்தார்கள் என்றும் குற்றம் சுமத்தி உள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் கேரளா தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மத்திய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை இந்த வழக்கை விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் ஜாமினில் விடுதலையான ஸ்வப்னா சுரேஷ் எழுதி உள்ள சுயசரிதை புத்தகம் வெளியாகி கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், இதுவரை அறியாத அம்சங்களையும், அரசியல் மற்றும் நிர்வாகத் துறையில் உள்ள பெரியவர்களுடன் தனக்குள்ள தொடர்புகளையும் தெரிவித்து உள்ளார்.
மேலும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர், முன்னாள் மந்திரி ஜலீல் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இடம் பெற்று உள்ள.
அதில், கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலர் எம்.சிவசங்கர் தன்னை 2வது மனைவியாக திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இருவரும் உத்தியோகபூர்வ பயணத்தைப் போல அண்டை மாநிலத்திற்குச் சென்றபோது இது நடந்தது. “சென்னையில் உள்ள ஒரு கோவிலில் சிவசங்கர் என் கழுத்தில் தாலி கட்டி, என் நெற்றியில் விபூசி பூசியதுடன், என்னை விட்டு விலக மாட்டேன் என்று உறுதியளித்தார்”, நான் பார்வதி சிவசங்கர் என்று ஸ்வப்னா தெரிவித்துள்ளார்.
மேலும், கேரளாவில் மீண்டும் பினராயி விஜயன் அரசு வர வேண்டும் என்பதற்காகத்தான் தங்கக் கடத்தல் விவகாரத்தில் அரசுக்கோ, அரசு சார்ந்தவர்களுக்கோ எந்த தொடர்பும் இல்லை என்று சிறையில் இருந்தபடி வெளியிட்ட ஆடியோவில் தெரிவித்திருந்தேன். ஆனால், ஆட்சி மாறினால் வழக்கு விசாரணைக்கு போக்கும் மாறும் என்ற நினைத்ததுடன், என்னை காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள் என்றும், மீண்டும் இடதுசாரி முன்னணி ஆட்சிக்கு வந்தால் தான், வழக்கில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறி என்னை நம்ப வைத்து அந்த ஆடியோவை பதிவு செய்தார்கள் என்றும் குற்றம் சுமத்தி உள்ளார்.
“முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர், அவரது கூடுதல் அரசியல் செயலாளர் சி.எம்.ரவீந்திரன், முதல்வரின் முன்னாள் முதன்மை தலைமைச் செயலாளர் நளினி நெட்டோ, முன்னாள் சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் ஆகியோர் ஏதோ ஒரு வகையில் ஐக்கிய அரபு அமீரகம் தூதரகம் மூலம் பல சரக்குகளை அனுப்புவதில் ஈடுபட்டுள்ளனர். ” என்று குற்றம் சாட்டி இருப்பதுடன், கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா ஸ்பிரிங்லர் டேட்டா ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக தெரிவித்துள்ளார்.
தனக்கு யார் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் இல்லை என்றும் ஸ்வப்னா தெளிவுபடுத்தி உள்ளார்.. ஆனால், துணைத் தூதரகத்தின் வழக்கமான பார்வையாளரும், கேரள சட்டமன்றத்தில் ஒரு முக்கிய நபருமான முன்னாள் அமைச்சர் ஒருவர் மட்டுமே தன்னை பாலியல் ஆர்வத்துடன் அணுகியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக “அவர் வாட்ஸ்அப்பில் அரட்டை அடித்து என்னை ஒரு ஹோட்டலுக்கு அழைத்தார். அவர் என்னை பலமுறை அழைத்தாலும் நான் அசையவில்லை” என்று ஸ்வப்னா தெரிவித்து உள்ளார். இது தொடர்பான அனைத்து தொலைபேசி ஆவணங்களும் என்னிடம் ஆதாரமாக உள்ளன, இவை விசாரணை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன உள்பட பல பரபரப்பு தகவல்கள் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
ஸ்வப்னா சுரேஷின் இந்த புத்தகம் கேரள அரசியலில் மீண்டும் புயலை கிளப்பி உள்ளது. அதில் முதல்வர் பினராயி விஜயன்,அவரது மகள் மீதான குற்றச்சாட்டுக்கள், ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளன.