விராட் கோலியின் டி20 கேப்டன்சி முடிவு குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரைன் லாரா கருத்து

Must read

மும்பை: 
விராட் கோலியின் டி20 கேப்டன்சி முடிவு குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரைன் லாரா கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணியின் 20 ஓவர் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகிய பிறகு, விராட் கோலி அணித்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு தற்போது வரை இந்திய அணியின் டெஸ்ட், 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளின் அணித்தலைவராக நீடித்து வரும் அவர், தற்போது 20 ஓவர் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கோலியே அணித்தலைவராகத் தொடருவார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரைன் லாரா,  டி20 அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி வெளியிட்ட அறிவிப்பைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அணித்தலைவர் பொறுப்பு எவ்வளவு அழுத்தங்கள் நிறைந்தது என்று நான் அறிவேன். கோலியின் முடிவு அவருக்கு மட்டுமின்றி இந்திய அணிக்கும் பெரியளவு பயனளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article