மும்பை: மகாராஷ்டிரா துணைமுதல்வர் அஜித்பவாரின் சொந்தக்காரர்கள் மற்றும் நெருக்கமானவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.184 கோடி கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநில துணைமுதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் இருந்து வருகிறார். இவர் பாஜக ஆட்சியின் போதும் துணைமுதல்வராக இருந்தவர். இவர்மீது ஏற்கனவே ஏராளமான ஊழல் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும், நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ.184 கோடி கணக்கில் வராத கறுப்பு பணம் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அக்டோபர் 7ந்தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில், வருமான வரித்துறையினர், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் குடும்பத் துடன் தொடர்புடைய மும்பையைச் சேர்ந்த இரண்டு ரியல் எஸ்டேட் குழுக்கள் மற்றும், அஜித் பவாரின் உறவினர்களுடன் தொடர்புடைய சில நிறுவனங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது மும்பை, புனே, பாரமதி, கோவா மற்றும் ஜெய்ப்பூர் முழுவதும் பரவியிருக்கும் சுமார் 70 இடங்களில் நடத்தப்பட்டன.
அஜித் பவாரின் மகன் பார்த்த் பவருக்கு சொந்தமான அனந்தா மெர்க்ஸ் PVT லிமிடெட் நிறுவனத்தின் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும், அஜித் பவாரின் சகோதரிகளுக்கு சொந்தமான நிறுவனங்கள் DB ரியால்டி, டைனமிக்ஸ் குழுமம் மற்றும் மும்பை, சதாரா மற்றும் கோலாப்பூரில் உள்ள ஷிவலில் குழு அலுவலகங்களுடன் சோதனை நடத்தப்பட்டன.
இந்த சோதனை மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சோதனையில் கிடைத்தது என்ன என்பத குறித்து வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சோதனையின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் பல முதன்மையான கணக்கற்ற மற்றும் பினாமி பரிவர்த்தனைகளை வெளிப்படுத்தியுள்ளன. இரண்டு பெரு நிறுவனங்களிடம் கிடைத்த ஆதாரத்தின்படி, ரூ .184 கோடி கணக்கில் வராத வருமானத்தை நிரூபிக்கும் குற்ற ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு சந்தேகத்திற்குரிய முறைகளின் மூலம், போலி பங்கு பிரீமியம், சந்தேகத்திற்கிடமான பாதுகாப்பற்ற கடன்கள், சில சேவைகளுக்கான ஆதாரமில்லாத வருமானம் போன்றவையும் கண்டு புடிக்கப்பட்டு உள்ளது. இந்த பணம் மூலம், டெல்லியில் உள்ள ஆடம்பரமான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், கோவாவில் உள்ள ரிசார்ட்ஸ், மகாராஷ்டிராவில் விவசாய நிலங்கள் மற்றும் சர்க்கரையில் முதலீடு போன்ற பல்வேறு சொத்துக்களை கையகப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சொத்துகளின் புத்தக மதிப்பு சுமார் 170 கோடி ரூபாய். அத்துடன் கணக்கில் வராத ரூ .2.13 கோடி ரொக்கமும், ரூ .4.32 கோடி நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே மகாராஷ்டிரா மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மீது கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக அவரது சர்க்கரை ஆலையை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]