சென்னை: திரையுலக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பார்த்திபன், தனதுசாதி நாயுடு என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வாய்த்தவறி சொல்லிவிட்டேன்.. என தனது ஜாதி குறித்த பேச்சுக்கு நடிகர் பார்த்திபன் மன்னிப்பு கோரினார்.

பார்த்தீபன் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து “குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது!” என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அதற்கு மன்னிப்புகோரி வீடியோ வெளியிட்டார்.
இந்த நிலையில், தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்த ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்திபன், “நான் ஒரு நாயுடு பையன் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கும் மன்னிப்பு கோரி உள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பானியில் செயல்படுபவர் நடிகர் பார்த்திபன். அழகாக தமிழ் பேசும், இவர் அவ்வப்போது ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த முறை தனது மேடைப் பேச்சால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆனால் அதே வேளையில், அந்த சர்ச்சைக்கு அவர் தரப்பில் இருந்து விளக்கமும், மன்னிப்பும் வெளியிடப்பட்டுள்ளன.
சமீபத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்த ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்திபன், “நான் ஒரு நாயுடு பையன்… ஆனால் சென்னையில் வளர்ந்ததால் எனக்கு தெலுங்கு சரியாக தெரியாது” என்று பேசியிருந்தார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பெரிய விவாதமாக மாறியது.
இதனை தொடர்ந்து, பலரும் பார்த்திபன் திடீரென “ஏன் சாதியை குறிப்பிட வேண்டும்?”, “இது தேவையற்ற பேச்சு” என்று விமர்சனம் எழுந்தது. . தமிழ்நாட்டில் சாதி பற்றிய எதிர்மறை கருத்துகளை முன்வைத்து வந்த பார்த்திபன் திடீரென தான் நாயுடு என பேசியதும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இதையடுத்து தனது சாதி பேச்சு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க, பார்த்திபன் ஒரு ஆடியோ பதிவு வெளியிட்டு தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். அதில், “என் பேச்சு யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எந்த நோக்கத்திலும் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒருவரின் பிறப்பு அவருடைய தேர்வு அல்ல. நான் எந்த குடும்பத்தில் பிறந்தேன் என்பதைக் மாற்ற முடியாது. ஆனால் நான் வாழும் விதமும், நான் நேசிக்கும் மொழியும் என் தேர்வு” என்று கூறியுள்ளார். தமிழ் மொழிக்கு தனது பற்றை மீண்டும் வலியுறுத்திய அவர், “எனக்கு வாழ்வாதாரமும், மரியாதையும் தந்தது தமிழ் தான்” என்றும் குறிப்பிட்டார். அதே சமயம், அந்த நிகழ்ச்சியில் பேசும்போது ஏற்பட்ட பதற்றத்தையும் அவர் வெளிப்படுத்தினார். “எனக்கு தெலுங்கில் சரியாக பேச தெரியாததால், திணறாமல் ஏதாவது சொல்லிவிட்டு இறங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த வார்த்தைகள் வந்துவிட்டது” என்று அவர் விளக்கம் அளித்தார்.
மேலும், அந்த படத்தில் தனது குரலுக்கு பதிலாக வேறு ஒருவர் தெலுங்கில் டப்பிங் செய்ததாகவும், தமிழ் பதிப்பில் தான் தனது குரலில் பேசுவேன் என்றும் கூறியுள்ளார். இறுதியாக, “இதைக் பெரிய பிரச்சனையாக்காமல் நல்ல முறையில் முடித்து விடுங்கள். தமிழ் ஒரு உயர்ந்த மொழி; அதில் அன்பும் கருணையும் உள்ளது” என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்ட அவர், “சத்தியமாக சொல்கிறேன், எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை. அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி அதைக்கூட ஒரு கிண்டல் பாணியில் சொன்னேனேத் தவிர, இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது.
அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக கொண்டாடுகவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாக கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேர் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க எனக்கு விரும்புவனல்ல.
இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வ மாக் மன்னிப்பை தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக் மிக் ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை பாதுகாப்பேன்” என்றார்.
[youtube-feed feed=1]