கேரளாவில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சாமியாரின் ஆண் உறுப்பை தான் அறுக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட இளம்பெண் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் சுவாமி கணேசானந்தா என்ற சாமியார்.

கேரள சட்டக் கல்லூரி மாணவி ஒருவரை அவர், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, அப்போது அவருடைய ஆணுறுப்பை மாணவி அறுத்து தப்பிச் சென்றதாக செய்திகள் தெரிவித்தன. துணிச்சலுடன் செயல்பட்ட மாணவி, அத்துமீறிய சாமியாரின் ஆண் உறுப்பை அகற்றியிருக்கிறார் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டினார்.

அதே போல பல்வேறு மகளிர் நல அமைப்புகளும் அந்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்தன. . இதற்கிடையே அந்த சாமியார், “முற்றும் துறந்த எனக்கு ஆணுறுப்பு தேவையில்லை என்று தானே அதனை அறுத்துக்கொண்டேன்” என்று தற்போது வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

அதே போல, அந்ச மாணவியும் “அந்த சாமியாரின் ஆண் உறுப்பை நான் துண்டிக்கவில்லை. காவல்துறையினர் அவ்வாறு வதந்தி பரப்பிவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார். இது கேரள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினரோ, அந்தப் பெண் திடீரென மாற்றிப்பேசுவதாக தெரிவிக்கிறார்கள்.