சென்னை,

திரைப்பட தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.

அப்போது, அவரிடம் எனக்கு பிடிக்காத சொற்களில் வேலை நிறுத்தம் ஒன்று என்று கூறியுள்ளார்.

தமிழக திரையுலகில் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெப்சி தொழிலாளர்களுடன் வேலை செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்ததையடுத்து, நேற்று முதல் படப்பிடிப்புகள் முடங்கி உள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும்  காலா மற்றும் விஜயின் மெர்சல்  உள்பட 35க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

இந்நிலையில், ஃபெப்சி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வணி இன்று ரஜினி காந்தை சந்தித்து பேசியுள்ளார். அதில், தொழிலாளர்களின் நிலை குறித்தும், வேலை நிறுத்தும் தொடர்பாகவும் ரஜினிகாந்த் கேட்டுள்ளார்.

இதனையடுத்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

எனக்கு பிடிக்காத சொற்களில் வேலைநிறுத்தம் என்கிறது ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சுயகௌரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசி தீர்வு காணலாம்.

இந்த பிரச்சனைக்கு தயாரிப்பாளர் சங்கமும், ஃபெப்சி சம்மேளனமும், கலந்து பேசி விரைவில் சுமூக தீர்வு காணவேண்டும் என்பது மூத்த கலைஞர் என்கிற முறையில் எனது அன்பான வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார்.