டில்லி,

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தரப்பினர், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரிக்க மறுத்து, நீதிபதி பாலி நாரிமன் விலகுவதாக தெரிவித்ததால், வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தனிக்கோர்ட்டு வழக்கிய தண்டனையை,  கடந்த பிப்ரவரி மாதம் உறுதி செய்தது தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

இதையடுத்து மூன்று பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள  நான்கு வருட சிறைத் தண்டனையை மறுசீராய்வு செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமித்தவராய் கோஷ், ரோஹின்டன், பாரி நாரிமன் அமர்வு முன், இன்று( ஆகஸ்டு 2) விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த சீராய்வு மனு இன்றைய பட்டியலில் இடம் பெறவில்லை. தேதி அறிவிக்கப் படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்கிறது உச்சநீதிமன்றம்.

‘நீதிபதி பாலி நாரிமன், ‘இந்த வழக்கில் இருந்து விலகிக்கொள்வதாக ஏற்கனவே தெரிவித்திருந்ததால்’ விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.