அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘பிகில்’. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2019-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி வெளியானது.
‘பிகில்’ படத்தின் வசூல் நிலவரம் தொடர்பாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனிடையே இந்தப் படம் 20 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்று சில தினங்களாக தகவல் பரவி வருகிறது.


சிலர் இந்தத் தகவலைக் கூறியதே ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்த்த தலைமை செயல் அதிகாரியான அர்ச்சனா கல்பாத்தி தான் என்று குறிப்பிட்டனர். இந்தச் செய்திகளுக்கு அர்ச்சனா கல்பாத்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.