நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன், அமைச்சர் பொய் சொல்கிறார்! பரூக் அப்துல்லா

Must read

ஸ்ரீநகர்:

நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன், அமைச்சர் நாடாளுமனற்த்தில் பொய் சொல்கிறார் என்று காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த  சட்டப்பிரிவு 370, 35ஏ ரத்து செய்யப்பட்ட நிலையில், காஷ்மீர் மாநில  மறுசீரமைப்பு மசோதா குறித்து மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்தின்போது, மாநிலங்களவை எம்.பி.யான பரூக் அப்துல்லா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க பதில் அளித்து பேசிய  உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது, ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவோ, வீட்டுக்காவலில் வைக்கப்படவோ இல்லை, அவர் தனது வீட்டிலேயே இருக்கிறார்  என்று கூறினார்.

இந்த நிலையில், இன்று தனியார்  ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள, தான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன் என்று கூறியதுடன்,  உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுபோன்று பொய் பேசுவது வருத்தம் அளிக்கிறது என்று கூறினார்.

தன்னை வீட்டிற்குள் வைத்து வெளியே பூட்டிவிட்டு வீட்டு வாசலில் காவலுக்கு அதிகாரிகளையும் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்தவர்,  என்னை வீட்டுச்சிறை வைப்பதற்கு நீங்கள் யார்? என்றும் கேள்வி எழுப்பினார். நான் இந்தியன். நான் என் உரிமைக்காகவும் ஜனநாயகத்துக்காகவும் தொடர்ந்து போராடுவேன் என்றார்.

“நாங்கள் அனைவரும் மீண்டும் ஒன்றாக அமர்ந்து அதை ஒரு தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்வோம் என்று கூறியவர், சாதாரண மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், மருந்துகள் கூட கிடைப்பதிலலை என்றும் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பொதுமக்களிடையே பேசிய பரூக் அப்துல்லா,  ஜம்மு-காஷ்மீரை மத்திய அரசு பிரித்து இருப்பது ஒருவரின் உடலை துண்டு போடுவதற்கு சமமானது. மாநிலத்தை பிரித்த இவர்கள், மக்களின் இதயங்களையும் இரண்டாக கூறு போடுவார்களா  என கேள்வி எழுப்பியவர்,  காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த போது மத்திய அரசு கொடுத்த உத்தரவாதத்தை மீறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

மேலும், ஒற்றுமைக்காகவும் தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று கூறியவர், காஷ்மீர் இந்தியாவில் இருந்து ஒருபோதும் பிரிந்து போக விருப்பமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மக்கள் ஜனநாயகத்திற்காகப் சேர்ந்து போராடுவோம். ஒற்றுமையே எங்களுக்கு வலிமையைத் தரும், உரிமைகளை விட்டுத் தர மாட்டோம். அவர்களை மக்களைப் பிரிக்கலாம். ஆனால் இதயங்களைப் பிரிக்க முடியுமா?  ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு செய்தது ஜனநாயக விரோத நடவடிக்கை. எங்களை முதுகில் குத்தாதீர்கள்! நெஞ்சில் சுடுங்கள்!

இவ்வறு அவர் கூறியுள்ளார்.

More articles

Latest article