மதுரை: நாடு முழுவதும் நாளை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், மதுரையில் நீட் தேர்வு எழுத தயாரான மாணவி ஒருவர் இன்று அதிகாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

முன்னதாக அவர் தனது பெற்றோருக்கு எழுதிய கடிதம் மற்றும் ஆடியோ வெளியாகி உள்ளது.

அவர் எழுதி உள்ள கடிதத்தில், நான் மருத்துவம் படிப்பேன் என அனைவரும் என்னிடம் அதிகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நான் நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால் அவர் களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போய்விடுவேன் என்ற அச்சத்தால் இந்த முடிவை எடுத்துள்ளேன், என்னை மன்னித்துவிடுங்கள் எனமாணவி ஜோதி துர்கா உருக்கமான தனது  கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காவல்அதிகாரியின் மகளான ஜோதி துர்கா வீடு   மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் உள்ளது. நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மன அழுத்ததுக்கு உள்ளான மாணவி  மாணவி ஜோதி துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் மாணவி ஜோதி தோல்வியடைந்த நிலையில், இந்தாண்டு நீட் தேர்விற்கு தயாராகி வந்தார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர், அவரது அறையில் இருந்து கடிதத்தையும், அவர் பேசிய ஆடியோ உரையாடலையும் கைப்பற்றினர்.

தற்கொலைக்கு முன்பு எழுதியுள்ள அந்த கடிதத்ததில்,  அப்பா மறக்காம செக் அப்புக்கு போங்க. வழக்கம் போல நீங்கள் சந்தோஷமாக இருங்கள். உங்களை சுற்றியிருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்திருங்கள். அது உங்களால் மட்டும்தான் முடியும். உங்களை எனக்கு  மிகவும் பிடிக்கும்…  நான் செல்கிறேன் அப்பா. நான் உங்களுக்கு நிறைய விஷயங்களை சொல்ல ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்கு இப்போது நேரம் இல்லை. ஸ்ரீதர் (சகோதரர்)- எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். உனக்கு என்னை மிகவும் பிடிக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனால் என்னை மன்னித்துவிடு ஸ்ரீதர். நீதான் சிறந்த சகோதரர்.

நான் ஒரு கோழை. மரியாதை உனது அன்புக்கும் மரியாதைக்கும் நான் தகுதியில்லாதவள். அப்பா, அம்மாவை நன்றாக பார்த்துக் கொள். எனக்காக அழ வேண்டாம். அம்மா, அப்பா கூட நீ மட்டும்தான் இப்போ இருக்கே. நீ சோகமாக இருந்தால் அவர்களும் சோகமாகிவிடுவார்கள். நீ பெரியவனாகி விட்டாய், உயர் கல்விக்கு செல்கிறாய். அதனால் நன்றாக படி, என்னை மறந்துவிடு.

செல்போன்ல நிறைய நேரம் கேம் விளையாடாதே. அப்புறம் அதற்கு அடிமையாகிவிடுவாய். நீ இரக்கக் குணம் கொண்டவன் ஸ்ரீதர். நன்றாக படி, பொறுமையாக இரு. முட்டாள்தனமாக எதையும் வீணடித்து விடாதே.

தேவிகா  நீ என்னை அதிகமாக நேசித்தாய். நீ எனக்காக எதையும் செய்தாய். எனக்கு ஆதரவாக இருந்தாய். ஸ்ரீதர் நான் மதுரை வந்தபிறகு, உன்னை பார்க்காமல் வருந்தினேன். நான் உன்னை விட்டு செல்வதற்கு என்னை மன்னித்துவிடு.

நான் உண்மையில் நன்றாக படித்தேன். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. நான் நீட் தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பேன். ஸ்ரீதரையும் பார்த்துக் கொள். இது யாருடைய தவறும் அல்ல. யாரும் யாரையும் குற்றம்சாட்டி கொள்ளாதீர்கள்.

அம்டத  தான் என்னுடைய நண்பர். மாமா, அத்தை, தாத்தா, பாட்டி அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். என் மேல் நீங்கள் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருந்தீர்கள். ஒருவேளை எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்காவிட்டால் உங்கள் கஷ்டமெல்லாம் வீணாகியிருக்கும். நான் சோர்ந்துவிட்டேன்.

இவ்வாறு அதில் கூறிப்பிட்டுள்ளார்.

அதுபோல பெற்றோருக்கு அனுப்பி உள்ள ஆடியோ செய்தியில்,

ஆடியோ: https://www.youtube.com/watch?v=UaL305yRriw&feature=youtu.be

”எல்லாருமே என்கிட்ட ரொம்ப எக்ஸ்பேர்ட் பண்ணீங்க. எனக்குத்தான் பயமா இருக்கு.. ப்ளீஸ் என்னை ப்ளேம் பண்ணாதீங்க. இது நான் எடுத்த முடிவுதான்.. எனக்கு ரொம்ப ஹேப்பியான ஃபேம்லி கிடைச்சிருக்கு.. எனக்குத்தான் அத பாதுகாக்க தெரியல.

Bye. ‘Amma I’m going to miss you. Mom sorry”’.. என பேசியுள்ளார்.