சென்னை: அதிமுகவின்  தற்போதைய இரட்டை தலைமைக்கு இடையே தீவிரமாக மோதல் நடைபெற்று, கட்சியினரை குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சசிகலா, அதிமுகவின் பொதுச்செயலாளர் நான்தான் என்று கூறி மேலும் ஒரு குண்டை தூக்கிபோட்டுள்ளார்.

ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் தன்னை கட்சியின் பொதுச்செயலாளராக அறிவித்துக்கொண்ட சசிகலா, முதல்வர் பதவியை கைப்பற்ற எண்ணினார். இதனால் கட்சி உடைந்தது. ஆனால், சசிகலாவின் முதல்வர் ஆசைக்கு  ஆசைக்கு  உச்சநீதி மன்றம் தடை போட்டு, சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டு சிறையில் அடைத்தது. இதையடுத்து, கடந்த 4 ஆணடுகாக இபிஎஸ்,ஒபிஎஸ் கொண்ட இரட்டை தலைமையில் முட்டல் மோதலுடன் ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், இரு தலைவர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாததால் ஆட்சியை பறிகொடுத்த நிலையில், தற்போது கட்சியை கைப்பற்ற இருவர்களுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.

அதிமுகவிக்கு ஒரு தலைவர்தான் வேண்டும் என கோஷம் எழுப்பி உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிச்சாமி செய்து வருகிறது. அதற்காக வரும் 11ந்தேதி அதிமுக பொதுக்குழு கூட உள்ளது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவில் எழுந்துள்ள பதவி ஆசை, இரு தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஒற்றை தலைமை விவகாரம் போன்றவற்றை  தனக்கு சாதகமாக பயன்படுத்தும் நோக்கில் சசிகலா, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தனது ஆதரவாளர்களை திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் விழுப்புரத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா, “அதிமுகவின் சட்டவிதிகளின்படி நானே அடிமட்ட தொண்டர்களின் பொதுச்செயலாளர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கட்சியை ஆரம்பித்த காலத்தில் அவருக்கு நிறைய தொந்தரவுகள் ஏற்பட்டன. அதைப்போல புரட்சித்தலைவி அம்மா அவர்களும் நிறைய கஷ்டங்களை சந்தித்துதான் கட்சியை ஒன்று படுத்தி வழிநடத்தினார். அந்த வகையில்,அம்மாவின் மறைவுக்கு பிறகு தற்போது கட்சியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டு வந்து, ஒன்று சேர்ந்து நிச்சயமாக தமிழகத்தில் அடுத்த ஆட்சியாக அதிமுக ஆட்சியைக் கொண்டு வருவேன் என தெரிவித்து உள்ளார்.