டெல்லி: பாஜகவில் சேரவில்லை ஆனால் காங்கிரசில் இருந்து விலகுகிறேன் என பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் தெரிவித்து உள்ளார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும், முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, மாநில பாஜக தலைவராக சித்துவை கட்சி தலைமை நியமித்தது. இதையடுத்து மோதல் மேலும் தீவிரதானது இதைத்தொடர்ந்து அமரீந்தர் சிங், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது, கட்சி தலைமையால்  ‘நான் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறேன். எனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து விரைவில் அறிவிப்பேன். காங்கிரஸ் கட்சி தலைமை யாரை நம்புகிறதோ, அவரை முதல்வர் ஆக்கட்டும் என்று கூறினார்.

தொடர்ந்து அவர் டெல்லி சென்று, பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது, உள்துறை அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் அமரீந்தர்  பாஜகவில் இணைய உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவின. தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்து பேசினார். இதனால்,  அமரீந்தர்சிங் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கேப்டன் அமரீந்தர் சிங்,  நான் பாஜகவில் சேரவில்லை, ஆனால் நான் காங்கிரசை விட்டு வெளியேறுகிறேன். என்தால், தொடர்ந்து அவமதிப்பைக் கையாள முடியாது என்று தெரிவித்து உள்ளார்.