நான் அழகன் இல்லை.. அறிவாளி இல்லை.. ஆனாலும்…:  மேடையில் ரஜினி நெகிழ்ச்சி

Must read

 

அழகோ அறிவோ இல்லாத தனக்கு தமிழக மக்கள் ஆதரவு அளித்துவருவதாக நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

துக்ளக் வார இதழின் 47வது ஆண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்ததாவது:

“சோ இல்லாத இந்த மேடையில் பேச வேண்டி வரும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை.  இன்று அவர் இல்லாத நிலையில், அவரது அவரது வாசகர்கள் மத்தியில் பேசுகிறேன்.

சோ போன்ற அறிவாளியான ஒருவர் எனக்கு நண்பராக கிடைத்தது எனது பாக்கியம். சிங்கம் மாதிரி இருந்தவர் உடல் நலமில்லாமல் இருந்ததை பார்த்த போது கஷ்டப்பட்டேன். அவர் என்னுடன் மணிக்கணக்கில் பேசுவார். அப்போது நானே என் முதுகை தட்டிக்கொடுத்துக்கொள்வேன்” என்று ரஜினி பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், “அழகோ அறிவோ இல்லாத எனக்கு தமிழக மக்கள் ஆதரவளிக்கிறார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

More articles

Latest article