சென்னை:

க்களால் நான் மக்களுக்காக நான் என்பதெல்லாம் அரசியல், அதுவெல்லாம் உண்மை கிடையாது என்று மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, அவரது சொத்துக்கு உரிமை கொண்டாடும் தீபா கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதா சொத்து தொர்பான வழக்கில், ஆஜரான ஜெ.தீபா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  மக்களால் நான் மக்களுக்காக நான் என்பதெல்லாம் அரசியல் என்று ஜெயலலிதா கூறியதை பொய் என்று கூறினார்.

மேலும், போயஸ் தோட்ட வீடு ஜெயலலிதாவும் அவரது அம்மாவும் நடித்து சம்பாதித்த சொத்து என்பதால் அதில் உரிமை கோர தனக்க உரிமை உண்டு என்றும், அதை யாராலும் தடுக்க முடியாது என்று தீபா எகத்தாளமாக தெரிவித்தார்.

தீபாவின் ஜெயலலிதா பற்றிய கருத்து அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

றைந்த  ஜெயலலிதா தனது சொத்துக்குறித்து எந்தவொரு உயிலும் எழுதாத நிலையில், இறந்துவிட்டதால், அவரது சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். விசாரணையைத் தொடர்ந்து,  ஜெயலலிதாவின் தற்போதைய வாரிசுகளான அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி, அவர்கள் இருவரும் நேற்று நீதிபதிகள் முன்பு ஆஜனார்கள். அப்போது, பேசிய நீதிபதி,  ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று ஜெயலலிதா கூறினார். அவரது சொத்துகளில் ஒரு பகுதியை மக்களுக்கு கொடுத்தால் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தீபா, ‘எங்களுடைய அத்தை ஜெயலலிதாவுக்கும் அதே எண்ணம் இருந்தது. அதனால், சொத்துகளை எல்லாம் நிர்வாகத்துக்குள் கொண்டு வந்து, எங்கள் அத்தை ஜெயலலிதாவின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ‘ஜெயலலிதாவின் வாரிசுகள், அவரது அண்ணன் பிள்ளைகள் தான் என்று அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும் அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்காமல் எப்படி போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லாமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது? எனவே அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், ‘தீபா, தீபக் ஆகியோருக்கு போயஸ் கார்டன் வீடு தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்படும்’ என்றார்.

ஆனால் தீபக், தீபா சார்பில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் தங்களுக்கு வேண்டும் என்று கேட்பதிலேயே குறியாக இருந்தனர்.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு சொத்தாட்சியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இப்போது போயஸ் கார்டன் வீட்டை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக அரசு அறிவித்துள்ளது. ஜெயலலிதா தனது சொத்து தொடர்பாக எந்தவொரு  உயிலும் எழுதி வைக்காததால், அவர் பெயரில் உள்ள அனைத்து சொத்துகளையும் சொத்தாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த தீபா, மக்களால் நான் மக்களுக்காக நான் என்பதெல்லாம் அரசியல், என்று ஜெயலலிதாவை கடுமையாக சாடினார்.

தீபாவின் நடவடிக்கையை அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றனர். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை தீபாவை பார்க்க விரும்பாத நிலையில், தற்போது ஜெயலலிதாவின் சொத்துக்காக, அலையும் தீபா, அவரையே குறை கூறி இருப்பது அதிமுக தொண்டர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.