சென்னை,
ஜெயலலலிதாவின் மறைவிற்குப் பிறகு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர், அவரது அண்ணன் மகள் தீபா.
“தற்போது சசிகலா வசிக்கும் போயஸ் தோட்ட இல்லம், எங்கள் பாட்டி சந்தியாவுக்குச் சொந்தமானது. ஆகவே அதில் எங்களுக்குத்தான் உரிமை உண்டு. சசிகலா வெளியேற வேண்டும்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது.
எங்களை ஜெ.வுடன் நெறுங்கவிடாமல் செய்தவர் சசிகலாதான்” என்று பேசிவரும் இவர்,
“தொண்டர்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜெ.வின் வாரிசாக சசிகலாவை வெளிப்படுத்தும் போஸ்டர்கள் தமிழகமெங்கும் ஒட்டப்பட்டன. அவற்றை பல இடங்களில் அதிமுக தொண்டர்கள் கிழித்து வருகிறார்கள். அதே நேரம், தாங்களாகவே, தீபா படத்துடன் போஸ்டர்கள் அடித்து ஒட்டுகிறார்கள்.
இப்போது தீபா மீது மதம் குறித்த விமர்சனத்தை சமூகவலைதளங்களில் சசிகலா ஆதரவாளர்கள் வைக்கிறார்கள்.
“தீபா கிறிஸ்தவ முறைப்படித்தான் வாழ்ந்து வருகிறார். அவர் எப்படி இந்து ஐதீகத்தின்படியே வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை சொல்லிக்கொள்ள முடியும்?
தீபா நெற்றியில் பொட்டோ; குங்குமமோ இடாதது வைப்பதில்லை. தீபாவின் கணவர் பெயர் மாதவன் பேட்ரிக் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். தீபாவும் கிறிஸ்துவ மதப்படியே வாழ்ந்து வருகிறார். அவர் முழுப்பெயர் தீபா பேட்ரிக் என்பதாகும்.
இதை மறைக்கிறார் தீபா” என்று சசிகலா ஆதராவள்ரகள் எழுதிவருகிறார்கள்.
இதுகுறித்து கேட்டபோது செய்தியாளர்களிடம் தீபா தெரிவித்ததாவது.
“என் அத்தை ஜெயலலிதாவின் மரணம் குறித்தும், அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு மற்றும் சொத்துக்கள் குறித்தும் நான் கேள்வி எழுப்புவது சசிகலா குடும்பத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எனக்கு மிரட்டல்கள் வந்தன.
ஆனால் அ.தி.மு.க., தொண்டர்கள் என்னை அரசியலுக்கு வருமாறு அழைக்கின்றனர்.
இப்படி எனக்கு ஆதரவு தினம் தினம் பெருவகிவருவதைப் பொறுக்க முடியாத சிலர்தான், என்னை கிறிஸ்தவர் என்று, சர்ச்சை கிளப்புகின்றனர்.
இன்னும் நிறைய விஷயங்கள், இதே போல கிளப்பி விடப்படும். ஆனால், அதையெல்லாம் மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.  நான் எல்லா மதத்துக்கும் பொதுவான பெண்.
நான் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தேன். ரம்ஜானுக்கும் வாழ்த்து தெரிவிப்பேன். எனக்கு தீபா பேட்ரிக் என பெயர் சூட்டி சிலர் மகிழ்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியை கெடுக்க விரும்பவில்லை. அவர்களோடு, நானும் சேர்ந்து மகிழ்கிறேன்.
நெற்றியில் பொட்டு வைக்காமல், நான் டி.வி., பேட்டிகளில் தோன்றியது எதார்த்தமாக நடந்தது” என்று தீபா தெரிவித்தார்.