சென்னை:
அதிமுக அரசுக்கு எதிராக வீரவசனம் பேசி வந்த டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா பரிந்துரைத்த நிலையில், நான் எப்போதும் அதிமுக எம்.எல்.ஏ.,வாகத் தான் செயல்பட்டு வருகிறேன், அதிமுக கொறடா உத்தரவின்படியே செயல்படுவேன் என்றும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ . கள்ளக்குறிச்சி, பிரபு தெரிவித்து உள்ளார்.
டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி அ.பிரபு, விருத்தாசலம் வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க ஆதாரங்களுடன் சபாநாயகரிடம் அரசு தலைமைக் கொறடா எஸ்.ராஜேந்திரன் புகார் அளித்தார்.
இது தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ள நிலையில், தாங்களும் தகுதி நீக்கம் செய்யப் படலாம் என்ற அச்சத்தில், தன்மீது நடவடிக்கை எடுத்தால் சபாநாயகரின் கையை வெட்டுவேன் என்று வீர வசனம் பேசிய அறந்தாங்கி ரத்தினசபாபதி, தான் அதிமுகவுக்கு எதிராக செயல்பட மாட்டேன் என்று தொபுக்கடீர் என்று காலில் விழுந்தார், அதைத்தொடர்ந்து, விருத்தாசலம் வி.டி.கலைச்செல்வன், தான் தீவிர அதிமுக விசுவாசி, அதிமுகவுக்கு ஆதரவாகவே இருப்பேன் என்று தெரிவித்திதார்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, நாங்கள் ஒருபோதும், கொறடா உத்தரவை எதிர்த்து நடந்தததில்லை என்றும், . இதுவரை சட்டசபையில் நடந்த ஓட்டெடுப்பில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாகத் தான் ஓட்டளித்துள்ளோம்.
நான் தொடர்ந்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக உள்ளேன். அப்படித் தான் செயல்படுகிறேன்; நாங்கள் எந்த கட்சியிலும் சேர்ந்து விடவில்லை. தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தால், கொறடா உத்தரவின்படியே செயல்படுவேன். ஜெயலலிதா ஆட்சி தொடர நாங்கள் பாடுபடுவோம் என்று கூறினார்.
தனக்கு சபாநாயகரிடம் இருந்து அதிகாரப்பூர்வ, ‘நோட்டீஸ்’ கிடைத்தவுடன், அதை சட்ட ரீதியாக ‘சந்திப்போம் என்றும் பிரபு தெரிவித்துள்ளார்.