மும்பை:
ந்தியாவில் பாகிஸ்தான் கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் ராஜ் தாக்கரே கட்சியினருக்கு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டயே கட்ஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரஸ் கவுன்சில் தலைவராக இருந்த போது மார்கண்டயே கட்ஜூ பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பசுவதை மற்றும் மாட்டுக்கறி தொடர்பான விவாதம் போதும் கட்ஜூவின் கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தியது.
markandey-katju
இந்நிலையில், யூரி தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் கலைஞர்கள் இந்தியாவில் நிகழ்ச்சி நடத்தவும், பாகிஸ்தான் நடிகர்கள் நடித்த படங்களை இந்தியாவில் வெளியிடவும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மீறினால் வன்முறையில் ஈடுபடுவோம் எனவும் அக்கட்சியினர் எச்சரித்துள்ளனர். இது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மார்கண்டயே கட்ஜூ தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
“மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர் ரவுடிகள். இவர்கள் அரபிக்கடலின் உப்பு நிறைந்த தண்ணீரை குடிக்கின்றனர்.
நான் சங்கம் நதி தண்ணீர் குடித்த அலகாபாத் ரவுடி.  யாருடைய உதவியில்லாமல் தவிக்கும் பாகிஸ்தான் கலைஞர்களிடம் மோதாமல், என்னுடன் மோதுங்கள்.  “யார் பெரிய ரவுடி என்பதை உலகம் பார்க்கட்டும்” என்று கூறி உள்ளார்.
katju
கட்ஜு ஏற்கனவே தமிழகர்களை பற்றியும், தமிழக முதல்வர் வதந்தி குறித்தும் பரபரப்பான கருத்துகளை கூறி உள்ளார்.
தமிழர்கள் இந்தி கற்பதில்லை, கற்காவிட்டால் வெளியில் போனால் கஷ்டம் என்றும், திருக்குறளில் சமஸ்கிருதம் கலந்திருப்பதால் அதை தடை செய்ய முடியுமா என்றும் கேட்டு பேஸ்புக்கில் பதிவு போட்ட அவர் தற்போது தமிழர்கள், பெங்காலிகளை விட மலையாளிகளே ஒசத்தி என்று புதிய பதிவைப் போட்டு தமிழர்களையும், பெங்காலிகளையும் கேலிப்பொருளாக்கினார்.
அதேபோல் தமிழகம் முழுவதும் , ஜெயலலிதா வதந்தி குறித்து கைது செய்யப்படுவதற்கு,   இந்த சட்டவிரோத கைதுகளை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் போராட வேண்டும். மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தமிழர்கள் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு, கோழைகள் என்று குறிபிட்டிருந்தார்.
அதேபோல்  சவுமியா கொலை வழக்கில் அவர் கூறிய சர்ச்சை கருத்து குறித்து சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக கட்ஜுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
தற்போது ராஜ்தாக்கரே பற்றி கட்ஜு கருத்து கூறி இருக்கிறார்.
இந்தியாவின் முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி என்ற ஒரு பொறுப்பான பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் சாதாரண மனிதர்கள் போல கருத்துக்கள் கூறி வருவது அவரை காமெடியனாகவே காட்டுகிறது.