தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.

கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி வழிகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நீர் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது ஜூலை முதல் வாரத்தில் சராசரியாக 18 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், ஜூலை 31 அன்று 21 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மொத்த நீர்மின்சார திறன் 2321.90 MW அதில் 833 MW நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. தினமும் அதிகாலை மற்றும் மாலை 6 முதல் இரவு 10 மணிவரை மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுவந்த நிலையில், கனமழை காரணமாக தற்போது 24 மணிநேரமும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ் நாட்டிற்கு 4000 மில்லியன் யூனிட் நீர்மின் உற்பத்தியை மத்திய மின்சார வாரியம் இலக்காக நிர்ணயித்திருக்கும் நிலையில், தென் மேற்கு பருவமழை மேலும் சில நாள் தொடர வாய்ப்புள்ளதால் தற்போதுள்ள சூழலில் இந்த இலக்கை தமிழ்நாடு விரைவில் எட்டிவிடும் என்று கூறப்படுகிறது.