எதிர்க்கும் மக்கள்

நெட்டிசன்:

சமூக ஆர்வலர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS ) அவர்களது முகநூல் பதிவு:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்ற நீர்கரிம வாயுக்கள் எடுக்க,  “ஜெம் லெபாரட்டரி பிரைவேட் லிமிடெட்” (Gem Laboratory Pvt.Ltd) என்ற நிறுவனத்தை மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதனால் இப்பகுதியின் இயற்கை வளம் பாதிக்கப்படும் என்று, மக்கள் போராடி வரகிறார்கள்.

மக்கள் எதிர்ப்பையும் மீறி,  “ஜெம் லபாரட்டரி” நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.  இந்த நிறுவனத்தின் அதிபர், மல்லிகார்ஜூனப்பா சித்தேஸ்வரா என்பவர். இவர் கர்நாடகா பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவவர்.  2004,2009 ல்  கர்நாடகத்தில் எம்.பியாக தேர்ந்தெடுக்க பட்டவர் இவர்.

இனி, ஹைட்ரோகார்பன் எடுப்பதால் ஏற்படும் விளைவுகளை அறிவோம்.

ஹைட்ரோ கார்பன்என அதன் வகைகள் மீதேன், ஈதேன் , ப்ரோபேன் , பியூட்டேன். எடுக்கும் இடம் மற்றும் பிரித்தெடுக்கும் முறையில் ஷேல் காஸ் , டைட் காஸ் , என்றும் பிரித்தறியலாம்.

நிலக்கரி என்று சொல்லி நெய்வேலி , ஜெயம்கொண்டத்தில் நிலத்தை பறித்தார்கள்;பின் வந்தவர்கள் மீத்தேன், ஷேல் காஸ் என்று வேறு வேறு பெயர்களில் வந்தார்கள். இப்பொழுது #ஹைட்ரோகார்பன் என்று சொல்லி வருகிறார்கள். இவை எல்லாமே ஒரே பெயரை மாற்றி மாற்றி சொல்லி நம்மை ஏமாற்றும் வேலை.

பொதுவாகவே இயற்கை எரிவாயு என்பது நீர்கரிம வாயுக்கள் #Hydrocarbon gases அனைத்தும் அடங்கியுள்ள ஒரு வாயுக்கலவை . இதில் பல்வேறு வகைகள் அவற்றின் இயல்பை பொறுத்து வேறுபடுத்தப்படுகின்றன. பூமியின் அடியில் இருந்து வெளியாகும் இயற்கை எரிவாயுவில் #மீதேன், #ஈதேன் , ப்ரோபேன் , பியூட்டேன், கார்பன் டை ஆக்சைடு , ஆக்சிஜன் , நைட்ரஜன் , ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் அரிதாக கிடைக்கும் வாயுக்களும் கலந்திருக்கும்.

கே.எஸ்.ஆர்.

இவற்றை பின்னர் தேவைகேற்ப்ப பிரித்தெடுக்க முடியும் நீர்கரிம வாயுகள் என்பது ஹைட்ரஜன் மற்றும் கார்பன் அணுக்களை மட்டுமே கொண்டுள்ள வாயுக்களின் தொகுதி.இவற்றில் முதலில் இருப்பது மீத்தேன் (CH4) ஒரு கார்பன் அணுவும் நான்கு ஹைட்ரஜன் அணுக்களையும் கொண்டது .கார்பன், ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்த எண்ணிக்கை அதிகமாகும் பொழுது அவற்றின் இயல்பும் மாறுகிறது . இவை வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

இது மட்டும் அல்லாமால் , இயற்கை எரிவாயு கிணறுகள் அடிப்படையில் மூன்று விதமாக பிரிக்கலாம். இவை எடுக்கும் எரிபொருளின் அடிப்படையில் வேறுபடுத்தப்படுபவை. முதலாவதாக கச்சா எண்ணெய் மட்டுமே எடுக்கக் கூடிய கிணறுகள் (Crude oil wells) . இவற்றில் முதன்மை எரிபொருள் கச்சா எண்ணெய் மட்டுமே ஆனாலும் இவற்றில் இயற்கை எரிவாயுவும் கிடைக்கும் இவை கச்சா எண்ணையில் கலந்து அல்லது தனியாகவே வெளியேறும் .இந்த வகை எரிவாயுகளை கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் நிலைக்கு முன்பேப் பிரித்தெடுப்பது அவசியம். இரண்டாவதாக இயற்கை எரிவாயு மட்டுமே எடுப்பதற்காக தோண்டப்படும் எரிவாயு கிணறுகள் (Dry gas wells) .

இந்த வகை கிணறுகளில் எரிவாயு மட்டுமே கிடைக்கும் இதனுடன் சில வாயுக்கள் வெளியேறினாலும் அவை சுத்திகரிப்பு நிலையங்களில் முற்றிலுமாக பிரித்தெடுக்கப்படும் .மூன்றாவதாக திரவநிலையில் மாற்றமடைந்து வெளிப்படும் எரிவாயுவை சேகரிக்கும் கிணறுகள் (Condensate wells/). இந்த வகை கிணறுகளில் இயற்கை எரிவாயு மட்டுமல்லாமல் திரவதுளிகள் போன்றும் #எரிவாயு வெளிப்படும் இந்தவகை எரிவாயுவும் தனியாக சேகரிக்கப்படும் . இவை வாயு நிலையில் இருந்து திரவநிலைக்கு இயல்பிலேயே மாறி இயற்கையில் கிடைக்கும் எரிவாயுக்கள் .

இந்த திட்டத்தால் நிலத்தடி நீர் முழுதுமாக வறண்டுபோகும். இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, மக்கள் குடிப்பதற்கு ஒரு சொட்டு நீர்  இல்லாமல் போகும்.

இத் திட்டத்தை எதிர்த்து போராடுவதும், தடுத்து நிறுத்துவதும் நமது கடமை!