துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிராக 202 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது ஐதராபாத் அணி. 230 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி, கடைசியில் 201 ரன்களையே தொட முடிந்தது.
அந்த அணியின் துவக்க வீரர்களான வார்னர் மற்றும் பேர்ஸ்டோ அரைசதம் அடித்தனர். பேர்ஸ்டோ 3 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.
மற்றபடி, அந்த அணியின் கேன் வில்லியம்சன் 20 ரன்களும், அபிஷேக் ஷர்மா அடித்த 12 ரன்களும்தான் அடுத்த அதிகபட்ச ரன்கள். அந்த அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை எடுத்தது.
பஞ்சாப் அணியின் சார்பில் ரவி பிஷ்னோய்க்கு 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங்கிற்கு 2 விக்கெட்டுகளும் கிடைத்தன.