ரெஸ்டாரெண்டில் சாப்பிட்ட உணவிற்கு பில் கட்ட மறுத்த மனைவியை கைது செய்யக் கோரி கணவர் போலீசில் புகார் அளித்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்தேறியுள்ளது.

food

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள சீன உணவகத்திற்கு ஒரு தம்பதியினர் உணவருந்த சென்றனர். இருவரும் பல்வேறு வகையான உணவுகளை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அங்கு போலீசார் வந்தனர். உணவகத்திற்குள் போலீசார் வந்ததால் ஊழியர்கள் மற்றும் அங்கு உணவருந்தி கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தாம் அங்கு வந்ததற்கான காரணம் குறித்து போலீசார் தெரிவித்தது அவர்களை மேலும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தம்பதியிடையே உணவிற்கான கட்டணத்தை செலுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இறுதியாக கட்டணத்தின் சரிபாதி தொகையை மனைவி கட்ட வேண்டுமென கணவன் கூறியுள்ளார். இருப்பினும் மனைவி தனது பங்கை தர மறுத்து சாப்பிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கணவர் அந்நாட்டின் அவசர எண்ணான 000 வை அழைத்து தனக்கு பிரச்சனை உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அதனாலே உணவகத்திற்குள் போலீசார் வந்துள்ளனர். அதன்பிறகு அவர்கள் தம்பதியினரிடம் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் இருவருக்கும் அறிவுரை கூறிய போலீசார் சிறிய பிரச்சனைகளுக்கு எல்லாம் போலீசை அழைத்து எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் என எச்சரித்து சென்றனர்.

சாப்பிட்ட உணவிற்கு கட்டணம் செலுத்தவில்லை என தனது மனைவி மீது கணவனே போலீசீல் புகார் தெரிவித்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்ததுடன் இச்சம்பவம் வைரலாக்கப்பட்டும் வருகிறது.