டில்லி,

ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ள   பணக்காரர் பட்டியலில், பதஞ்சலி நிறுவனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா 8வது இடத்தை பிடித்துள்ளார்.

இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது வர்த்தக மதிப்பு 173 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

 

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்தவர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா (வயது 45). இவர் பதஞ்சலி யோகா நிறுவனர் யோகா குரு பாபா ராம்தேவின் தீவிர சீடர். இவர் பதஞ்சலி பெயரில் ஏராளமான உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

இவரது பொருட்களின் விற்பனை தூதுவராக யோகா குரு பாபா ராம்தேவ் செயல்பட்டு வருகிறார்.

தற்போது நாடு முழுவதும் பெரும் வரவேற்பு பெற்றுள்ள பதஞ்சலி உணவு பொருட்கள், ஆயுர்வேத தயாரிப்புகளின் நிர்வாகி ஆச்சார்யா பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு 173 சதவிகிதம் உயர்ந்து தற்போது நாட்டின் 8வது பணக்காரராக உயர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு 25வது இடத்தில் இருந்த பதஞ்சலி நிறுவனம்  தற்போது 8வது இடத்தை எட்டியுள்ளது.

மேலும்  ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ள செல்வந்தர் வரிசையில் டி-மார்ட் சூப்பர் மார்க்கெட் (D-mart) நிறுவனத்தின் தலைவர் ராதாகிஷன் தமானி முதலிடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 320 சதவீதம் அதிகரித்து தற்போது 56 ஆயிரம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துள்ளார்..

மத்திய அரசு கொண்டுவந்துள்ள பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் இந்த நிறுவனங்களின் வியாபாரம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பணக்காரர்களின் நிறுவனங்களுக்கு சாதகமாகவே உள்ளன. இது  தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் சரிவு, ஒழுங்கு படுத்தப்படாத துறைகளில் இத்தகைய திட்டங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது “என்று ஹுருன் நிர்வாக இயக்குனர் அனஸ் ரஹ்மான் ஜுனாயி கூறி உள்ளார்.