காவிரி விவகாரம்: 23ம் தேதி மனித சங்கிலி போராட்டம்….ஸ்டாலின்

சென்னை:

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு பின்னர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘காவிரி விவகாரத்தில் கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை தொடர்பாக மத்திய அரசை கவர்னர் வலியுறுத்த வேண்டும்.

9 கட்சி தலைவர்கள் டில்லி சென்று பிரதமரை சந்திப்பது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை மாவட்ட தலைநகரங்களில் தோழமை கட்சிகளுடன் மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
English Summary
Human chain protest for Cauvery issue on april 23rd says Stalin