சமீபத்தில், அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா, புதிய விண்மீன்கள், நமது நட்சத்திர குடும்பம், சூரிய குடும்பம் மற்றும் கிரகங்கள் பற்றிய அசாதாரண மாற்றங்களை கவனித்து பதிவு செய்ய ஒரு டெலஸ்கோப் ஒன்றை 1990 நிறுவியது. ஹப்பிள் டெலஸ்கோப் என அறிப்படும் இது நாசாவின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாக கருதப்படுவது ஆகும். இதன் மூலம் விண்வெளியின் மர்மமான செயல்பாடுகளை நாம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது.

உண்மையில், நாசா அதன் முயற்சிகளில் ஒன்றாக, பிரபஞ்சத்தின் பல்வேறு மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகளைக் காண இந்த டெலஸ்கோப்பை பூமிக்கு மேலே சில ஆயிரங்கள் உயரத்தில் நிலை நிறுத்தி, பூமியையும், விண்வெளியையும் ஒவ்வொரு நொடியும் கண்காணித்து வருகிறது.  சமீபத்தில், பொதுமக்கள் தாங்கள் விரும்பும் நாளில் விண்வெளியில் நடக்கும் மாற்றங்களை காண அனுமதிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, தங்களின் பிறந்த நாளின்போது,  ஹப்பிள் தொலைநோக்கி மூலம் பதிவு செய்யப்படும், பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளைக் காண முடியும். இது பழைய தேதிகள் மற்றும் ஆண்டுகளுக்கும் பொருந்தும்.
இந்த டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட சில படங்களை கீழே காணலாம்


 

நாங்கள் சில தேதிகளை தோராயமாக தேர்ந்தெடுத்து சோதித்தோம்.

ஜனவரி 26, 2016
தொலைநோக்கி, இந்த நாளில், ஒரு பண்டைய வால்மீன் 332 பி / இக்கியா-முரகாமி சூரியனை நோக்கி பயணப்பட்டு நெருங்கியதும் எரிந்து போனது. இது ஒரு பனிக்கட்டி உருகுவதைக் காண்பது போல காணப்பட்ட தெளிவான காட்சியாக இருந்தது.

பிப்ரவரி 15, 1998
தொலைநோக்கி இரண்டு குட்டி விண்மீன் திரள்கள் எனப்படும் கேலக்சிகளின் மோதலைப் பதிவு செய்துள்ளது. இதில் ஒரு கேலக்சி ஐ ஸ்விக்கி 18, அதன் மேல் வலதுபுறத்தில் இருந்த மற்றொன்றும் ஆகும். இந்த மோதலின் விளைவாக ஒரு புதிய விண்மீன் ஒன்றும் உருவாகியுள்ளது.
 

மார்ச் 6, 2012

இந்த நாளில், 1984 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட, ஒரு சுற்று வட்டு கொண்ட நட்சத்திரமான ‘பீட்டா பிக்டோரிஸ்’ என்ற நட்சத்திரத்தை சுற்றியுள்ள வட்டு, ஒளி சிதறல் உருவாக்கும் தன்மையுள்ள தூசி மற்றும் குப்பைகளால் ஆனது என்றும், அந்த நட்சத்திரம் ஒன்றல்ல, இரண்டு என்பதும் கண்டறியப்பட்டது.
ஏப்ரல் 10, 1999

‘சர்க்கினஸ் கேலக்ஸி’ என்று அழைக்கப்படும் கருந்துளை சக்தியினால் இயங்கும் விண்மீன் மண்டலத்தில் உள்ள வாயுக்களின் வண்ண மயமான போக்கை பதிவு செய்துள்ளது.