ன்று வெளியாகியிருக்கும் விவேகம் படத்தை வாழ்த்தி நடிகர் கமல் ட்விட் செய்திருக்கிறார். இதை, “புரியும்படி ட்விட் செய்திருக்கிறார் கமல்” என்று நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்துள்ளனர்.

அரசியல் குறித்து புரியாத வார்த்தைகளில் ட்விட் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகர் கமல். “தொ.கா. நிகழ்ச்சிகளிலும் விளம்பரங்களிலும் புரியும்படி பேசும் கமல், அரசியல் பதிவுகளில் மட்டும் குழப்புவது ஏன்” என்று பலரும் விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று அஜீத் நடித்த விவேகம் படம் வெளியாகி உள்ளது.

இந்த படம் மூலம் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் தமிழ்த் திரையுலகில் அறிமுகம் ஆகிறார்.

இப்படம் குறித்து கமல், தனது ட்விட்டர் பக்கத்தில், “அக்ஷரா ஹாஸனுடன் சேர்ந்து இன்று விவேகம் படத்தை பார்க்கிறேன். நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன். திரு. அஜித் முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதைக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலர், “அட.. புரியும்படி ட்விட் செய்திருக்கிறாரே கமல்” என்று சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.

கமல் ட்விட்டுக்கும் இப்படி பலர் கமெண்ட் போட்டு கலாய்த்திருக்கிறார்கள்.