சென்னை: வடகிழக்கு பருவமழையில் இருந்து கால்நடைகளை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்த வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.

Livestock Protect, northeast monsoon, Government of Tamil Nadu , கால்நடை பாதுகாப்பு, வடகிழக்கு பருவமழை, தமிழக அரசு,

தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை  தொடங்கும் காலமாகும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படு கிறது. இதற்கிடையில், பருவமழையால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதவாறு தமிழகஅரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டு வருகின்றன. மழைநீர் வடிகால் கால்வாய்,  நீர் தேங்கும் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  வடகிழக்கு பருவமழை காலத்தில்,  கால்நடைகளை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

வெள்ளம் தொடர்பான நடவடிக்கைகளை முறையாக கண்காணிக்க மாவட்ட நிலையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது.  பொதுமக்கள் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில், இலவச தொலைபேசி எண் 1800 425 5880 மற்றும், கால்நடை அவசர சிகிச்சை ஊர்த்தியை அழைக்க 1962 என்ற இலவச எண் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் 1294 அவசர கால நடவடிக்கை குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

56 நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுகள் சிகிச்சை அளிக்க பயன்படுத்த ஏற்பாடு

மழையால் பாதிக்கக்கூடிய இடங்களில் 1749 கால்நடை மீட்பு மையங்கள் மற்றும் தங்குமிடங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட விலங்குகள் மீட்பு மையங்கள் மற்றும் முகாம்களுக்கு விரைவாக கொண்டு செல்ல ஏற்பாடு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மற்றும்  காயமடைந்த அனைத்து விலங்குகளுக்கும் உடனடியாக மருத்துவ சேவை

மாநிலத்தின் நோய் பரவும் அனைத்து பகுதியிலும் விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

கோழி பண்ணைகளில் விரிவான கண்காணிப்பு மற்றும் சோதனைகள்.

அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.