10வது வகுப்பு தேர்வு மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி?

சென்னை,

த்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை  10 மணிக்கு வெளியானது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.4 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்வை எழுதியுள்ள சுமார்  10 லட்சத்து 38 ஆயிரம்  மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி உள்ளளனர். மாணவ, மாணவியருக்கு உடனடியாக அவர்களின் செல்போன் வழியாக தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு முதல் தேர்வு முடிவுகள் கிரேடு முறையில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் 96.2 சதவிகிதம் மாணவியரும், 94.4 சதவிகிதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 8ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிந்தது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினர்.

இவர்களில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர் மாணவியர்.

தேர்வு முடிவுகள்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள இணையதளங்களிலும் பார்க்கலாம்.

www.tnresults.nic.in,    www.dge1.tn.nic.in,     www.dge2.tn.nic.in.

பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மதிப்பெண் சான்றுகள் பெறுவது எப்படி?

பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றுகளை 25ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அந்தந்த தேர்வு மையங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுகூட்டல் எப்போது?

மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோர் எந்த பாடத்துக்கும் மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம்.

அவர்கள் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கும், தேர்வு எழுத வராமல் விட்டவர்களுக்கும் துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடத்தப்படும். தேர்வு தேதி குறித்த அறிவிப்பு பிறகு வெளியாகும்.

இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 10வது வகுப்பு தேர்வு மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி?, How to get 10th Mark sheet?
-=-