சென்னை:
மிழகத்தில் ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்,  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது.

தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் “”””தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் தாழ்வழுத்த மின்நுகர் வோர்களின் கவனத்திற்கு கவனத்திற்கு’
கோவிட்-19 பரவுதலால் 24.03.2020 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது இந்திய அரசு ஊரடங்கினை மேலும் 2 வாரங்களுக்கு 04.05.2020 முதல் 17.05.2020 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ் நாட்டிலும் அதே போன்று ஊரடங்கு 04.05.2020 முதல் 17.05.2020 வரை சில வழிகாட்டுதல்களு டன் தொடரப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துடன் 05.05.2020 அன்று நடத்திய கலந்தாய்வில் வெளியிட்ட வழிமுறைகள் கீழ்வருமாறு:
அ) முந்தைய மாத கணக்கீட்டின்படி, மின்கணக்கீடு செய்யப்பட்ட தாழ்வழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின் நுகர்வோர்கள் (LT INDUSTRIAL AND COMMERICAL) தங்களது மின்கட்டணத்தை முந்தைய மாத கணக்கீட்டின்படியோ அல்லது அவர்களது மின்அளவியில் உள்ள மின்நுகர்வுக்கு ஏற்ப திருத்தப்பட்ட பட்டியல்படியோ 22.05.2020 வரை மின்கட்டணம் செலுத்தலாம்.
ஆ) வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர்களைப் பொறுத்தவரை எங்கெல்லாம் முந்தைய மாத கணக்கீட்டு தொகையின்படி கணக்கீடு செய்யப்பட்டுள்ளதோ, அந்த நுகர்வோர்களுக்கு அடுத்த மின் அளவீடு, சம்பந்தப்பட்ட அடுத்த மின் கணக்கீடு நாளன்று எடுக்கப்படும்.
எனவே, அவர்களுக்கு மின் கணக்கீடு இரண்டு இருமாத மின் அளவீட்டிற்கு மேற்கொள்ளப்படும். அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட மின் அளவீட்டிற்கான தொகையில், முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது சரி செய்யப்படும். அதற்கான மாதிரி கணக்கீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக ஒரு நுகர்வோரின் மின் அளவீடு கோவிட்-19 காரணமாக முந்தைய மாத கணக்கீடுபடி எடுக்கப்பட்டு பின்னர் அதைத் தொடர்ந்து அடுத்த இருமாத மின் அளவீடு அடுத்த கணக்கீடு மாதத்தில் மேற்கொள்ளப்படும்போது கீழ்வருமாறு கணக்கீடு செய்யப்படும்:
மின் அளவீடு கணக்கீடு செய்யப்பட்ட மாதம் மின் அளவீடு நுகர்வு கணக்கீடு விவரம்