சென்னை: பிளஸ்2 பொதுத்தேர்வை 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதிய நிலையில், 35 மாணவர்கள் மட்டுமே தமிழில்  35 பேர் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இது தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாநிலம் முழுவதும் பிளஸ்2 தேர்வை, மொத்தம் 7,532 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர்கள் எழுதியிருந்தனர். இதில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 2,478 ஆக உள்ளது. குறிப்பாக 397 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.  இதையடுத்து,  ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்.

தமிழ்நாடு மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவர்கள் எழுதினர்.  குறிப்பாக 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதினர். இதில், மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 5603 மாற்றுதிறானாளிகள் தேர்வை எழுதிய நிலையில்,அவர்களில் 5161பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதுபோல சிறைவாசிகளில் 125பேர்தேர்வு எழுதிய நிலையில் 115பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.  மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 92.37, மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 96.44 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். அறிவியல் பாடத்தில் 96.33 சதவீத மாணவர்களும், இயற்பியல் பாடத்தில் 98.48 சதவீத மாணவர்களும், வேதியியலில் 99.14 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதங்களை தேர்வுத்துறை வெளியிட்டு உள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு பள்ளிகள் அசத்தல் சாதனை புரிந்துள்ளது. அரசு பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய மாணவர்களில் 91.32 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே வேளையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 95.49 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது.

 

தனியார் பள்ளிகளில் 96.7 சதவிகித தேர்ச்சியும், மகளிர் மட்டும் படிக்கும் பள்ளிகளில்  96.30 சதவிகித தேர்ச்சியும், ஆண்கள் மட்டும் படித்த பள்ளிகளில்  86.96 சதவிகித தேர்ச்சியும், இருபாலார் சேர்ந்த படித்து தேர்வு எழுதிய பள்ளிகளில் 94.7 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவர்களை விட மாணவிகள் 4.07 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி. தேர்ச்சி அடைந்தவர்களில் மாணவிகள் 3,93,890, மாணவர்களில் 3,25,305 பேர் ஆவர்.  தேர்வு எழுதிய மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் வெற்றி.

(12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 7.5 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்)

பிளஸ் 2 தேர்வில் தமிழ் பாடத்தில் 35 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்

. ணினி அறிவியல் பாடத்தில் 6996 பேரும், வணிகவியலில் 6142 மாணவர்களும் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இவர்களில் 35 மாணவர்கள் மட்டுமே தமிழில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

ஆங்கிலத்தில்  வெறும் 7 பேரும், இயற்பியலில் 633 பேரும், வேதியியலில் 471 பேரும், உயிரியலில் 652 பேரும், கணிதத்தில் 2587 பேரும், தாவரவியலில் வெறும் 90 பேரும், விலயங்கியலில் 382 பேரும், கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) 6996 பேரும், வணிகவியலில் 6142 பேரும், கணக்கு பதிவியலில் 1647 பேரும், பொருளியலில் 3299 பேரும், , கணினிப் பயன்பாடுகளில் 2251 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியலில் 210 பேரும்  100க்கு 100 சதவிகிதம் மதிப் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மதிப்பெண் பட்டியலை (marksheets ) பள்ளிக் கல்வித் துறை விரைவில் வெளியிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும், மதிப்பெண் பட்டியலை இணையதளத்தில் இருந்த பதிவிறக்கம் செய்து அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 முடிவுகள்: முதலிடம் பிடித்தது திருப்பூர் மாவட்டம்… கடைசி இடம் திருவண்ணாமலை மாவட்டம்…