புதுடெல்லி:
​சீனாவுடனான மோதலில் எத்தனை இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை அரசு அதிகார பூர்வமாகத் தெரிவிக்காதது ஏன் என்று பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

சீனாவுடனான மோதலில் எத்தனை இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை அரசு அதிகார பூர்வமாகத் தெரிவிக்காதது ஏன் என்று பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

இந்திய படை வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். எத்தனை வீரர்கள்? அவர்கள் பெயர்கள் என்ன? எந்த மாநிலங்களைச் சார்ந்தவர்கள்? எந்தத் தகவலையும் அரசு இதுவரை அதிகார பூர்வமாகத் தெரிவிக்கவில்லை, ஏன்?சீனத் துருப்புகள் இந்திய நிலப்பரப்பில் ஊடுருவி 7 வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்தியப் பிரதமர் இது வரை வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை.

இது போன்று வாய் திறக்காத பிரதமரோ ஜனாதிபதியோ உலகில் வேறு நாட்டில் யாராவது உள்ளார்களா?. இதனிடையே, இந்தியத் தரப்பில் 20 வீரர்களும், சீனத் தரப்பில் படுகாயமடைந்தவர்கள் உள்பட 43 வீரர்களும் உயிரிழந்திருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அரசு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாகவே மேற்கோள்காட்டி தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.