சென்னை: தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், கஞ்சா, செல்போன் போன்றவை, கடுமையான சோதனைகளை மீறி சிறைக்குள் எப்படி வருகிறது என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளது.

கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் சிறைத்துறை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரி அவர்களது குடும்பத்தினர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு சென்னைய உயர்நிதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி, லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.புகழேந்தி, சிறைக்குள் செல்போன் வைத்திருந்ததாகக் கூறி இருவரையும் சிறைத்துறை அதிகாரிகள் கடுமையாக தாக்கியதாகவும், அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும், என எனவும் கோரினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ. ராஜ்திலக், சிறைக்குள் திடீரென சோதனை நடத்தியபோது அவர்களிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் கைதிகளான பன்னா இஸ்மாயிலும், பிலால் மாலிக் மற்றும் பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து றைத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அவர்களை சிறை அதிகாரிகள் கண்டித்துள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை சிறை மருத்துவர்களால் அளிக்கப்பட்டது, என்றார்.
அதையடுத்து நீதிபதிகள் மூவரது உடல் நிலை குறித்து ஆய்வு செய்து ஜனவரி 21ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனுக்கு உத்தர நீதிபதிகள், மேலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள சிறைக்குள் தடைசெய்யப்பட்ட கஞ்சா, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் வந்தது எப்படி வருகிறது என காவல்துறையினருக்கும், சிறை அதிகாரிகளுக்கும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து சிறைத்துறை டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை வரும் 21-க்கு தள்ளி வைத்தனர்.