சென்னை: சந்திராயன்-3 விண்கலத்தை சமவெளியில் நிறுத்த முயற்சி என தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்து உள்ளார். அதுபோல சந்திரயான்3 தரையிறங்குவது 100 சதவீதம் வெற்றிகரமாக இருக்கும் என்று டிஆர்டிஓ தலைமை இயக்குனர் பிள்ளை கூறியுள்ளார்.
இந்தியா உள்பட உலக நாடுகள் எதிர்பார்க்கும் சந்திரயான்2 விண்கலத்தின் லேண்டர் வாகனம் இன்று மாலை விண்ணில் கால் பாதிக்க உள்ளது. இதை இஸ்ரோ நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இருக்கிறது. இந்த தருணத்தை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க இந்தியா மற்றும் அமெரிக்காவின் கோவில்களில் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வு குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சோம்நாத், மயில்சாமி அண்ணாதுரை உள்பட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறும்போது, லேண்டரை தரையிறக்குவது என்பது,. “கிடைமட்டத்திலிருந்து செங்குத்து திசைக்கு மாற்றும் திறன் இங்கே நாம் விளையாட வேண்டிய தந்திரம். இங்குதான் கடந்த முறை பிரச்சனை ஏற்பட்டது என கூறினார். மேலும், சந்திரயான்-3, பாதுகாப்பான நிலவு தரையிறக்கத்தை இலக்காகக் கொண்டு, தொடர்ச்சியான படிகள் மூலம் செங்குத்து நிலைக்கு மாற்றப்படும். சந்திரயான்-2 திட்டத்தில் நிலவின் மேற்பரப்பில் தனது லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோவின் முந்தைய தோல்வி காரணமாக இந்த நடவடிக்கை முக்கியமானது. எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்தல், துல்லியமான தூரக் கணக்கீடுகளை உறுதி செய்தல் மற்றும் அனைத்து அல்காரிதம்களின் சரியான செயல்பாடு ஆகியவற்றையும் இந்த சவாலில் உள்ளடக்கியது என்றும் தெரிவித்துள்ளார்.
அதுபோல லேண்டரை தரையிறக்கும் பணி 100 சதவீதம் வெற்றியடையும் முன்னாள் டிஆர்டிஓ தலைமைக் கட்டுப்பாட்டாளர் பிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சந்திர ஆய்வு இலக்குகளை நோக்கிய ஒரு முன்னேற்றத்தில், நாட்டின் மூன்றாவது சந்திரப் பயணமான சந்திரயான்-3 சீராக முன்னேறி வருகிறது, ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் அதன் எதிர்பார்க்கப்படும் தரையிறக்கம். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முன்னாள் தலைமைக் கட்டுப்பாட்டாளர் (ஆர் & டி) டாக்டர் அபதுகதா சிவதாணு பிள்ளை சனிக்கிழமையன்று பணியின் வெற்றியில் நம்பிக்கையை வெளிப்படுத்தினார், மேலும் இந்த பணி வெற்றிகரமாக இருக்கும் என்று கூறினார். “இப்போது 100 கிமீ சுற்றுவட்டப்பாதையை நெருங்கிவிட்டதால், அது 30 கிமீக்கு வந்து, பின்னர் நிலவுக்கு இறங்கத் தொடங்கியது. இது 100 சதவீதம் வெற்றிகரமாக இருக்கும்” என்று ANI-யிடம் பேசிய பிள்ளை கூறினார்.
பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் (CEO) மற்றும் நிர்வாக இயக்குனருமான (MD) டாக்டர் பிள்ளை, சந்திரயான் -3 இன் முக்கியத்துவத்தை மேலும் எடுத்துரைத்தார், மேலும் “இது பல்வேறு சந்திர வளங்களை, குறிப்பாக ஹீலியம் -3 ஐ அடையாளம் காண உதவும். , இது எதிர்கால ஆற்றல் மூலமாக உறுதியளிக்கிறது.”
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குநராக வேலை செய்த தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து உள்ளார். அவர் தற்போதைய சந்திரயான்3 குறித்து கூறும்போது, இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் கால்பதிக்க உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ரஷியா நிலவுக்கு அனுப்பிய லூனா-25 விண்கலம் தரையிறங்க முடியாமல் நொறுங்கியது அனைவருக்கும் அதிர்ச்சி தரலாம். சர்வதேச விண்வெளி துறையில் மிகுந்த அனுபவம் உடைய தேசம் எப்படி தோல்வியை தழுவியது என்று பலர் நினைக்கலாம். ஆனால் உண்மையில் நிலாவில் உள்ள களநிலவரம் மிகவும் சவாலானது. சந்திரயான்-2 விண்கலத்துக்கு ஏற்பட்ட அதேகதி தான், லூனா-25 விண்கல த்துக்கு ஏற்பட்டு இருக்கும் என்று கருதுகிறேன்.
நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் முன்பாக வேகத்தை குறைக்க வேண்டியது அவசியம். அப்போது உயரமும் படிப்படியாக குறைந்து கொண்டே வரும். நிலவின் சமவெளி பகுதியில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு மலைமுகடு போல இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் அங்கு விண்கலத்தை தரையிறக்கும் போது கரடுமுரடான இடங்களில் சிக்கி அசம்பாவிதம் நிகழ வாய்ப்பு உண்டு.
ரஷியாவின் லூனா-25 விண்கலத்துக்கு அந்நிலையில் தான் பிரச்சினை ஏற்பட்டு இருக்கும் என்று கருதுகிறேன். அந்த நாட்டின் 14 ஆண்டுகால உழைப்பு நொடிப்பொழுதில் கானல் நீரானது மிகவும் வருத்தம் தருகிறது.
நாம் இதுவரை பார்த்திராத இடத்தில், ஒரு சவாலான காரியத்தை மேற்கொள்ளப் போகிறோம். லூனா-25 விண்கலத்தின் வேகத்தை குறைக்கும்போது ரஷியாவுக்கு பிரச்சினை ஏற்பட்டது.
ஆனால் நாம் சந்திரயான்-3 விண்கலத்தின் வேகத்தை 2 நாட்களுக்கு முன்பே குறைத்து வெற்றிகரமாக இயக்கி வருகிறோம். சந்திரயான்-2 உடன் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் உடன், தற்போது சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டருக்கு தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இப்போது வரை நடப்பது எல்லாமே இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது.
இதனால் உலக நாடுகளிடம் சந்திரயான்-3, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் மீது நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இருக்கிறது. இந்த தருணத்தை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. விக்ரம் லேண்டர் தரையிறங்கி, அதன்பின் ரோவர் வெற்றிகரமாக வெளியேறி செயல்பட்டால், அது இந்திய விண்வெளித்துறைக்கு மாபெரும் சாதனையாக கருதப்படும். அதுபோல, லவின் தென்துருவத்திற்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பிய முதல் நாடு இந்தியா என வரலாற்றில் இடம் பிடிக்கும்.
இந்த நிலையில் இன்று நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க இந்தியா மற்றும் அமெரிக்காவின் கோவில்களில் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.