இரு மாநிலங்களில் ஒரே ஆளுநர் கொடி ஏற்றுவதா? நாராயணசாமி விமர்சனம்

Must read

புதுச்சேரி

மிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி  தெலுங்கானா என  இரு மாநிலங்களில் கொடி ஏற்றுவதை புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமசாமி விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர், “துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன், குடியரசு தினத்தன்று புதுச்சேரியிலும், தெலங்கானாவிலும் தேசியக்கொடி ஏற்றி வைக்கவுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இதுவரை இந்தியச் சரித்திரத்தில் ஓர் ஆளுநர் இரண்டு மாநிலங்களில் ஒரேநேரத்தில் தேசியக்கொடி ஏற்றிய சம்பவம் எங்கும் நடந்ததில்லை.

தமிழிசைக்கு புதுச்சேரி மாநிலத்தில் கொடி ஏற்ற உரிமை உள்ளது.  அதே வேளையில் புதுச்சேரி, தெலங்கானா என இரண்டு மாநிலங்களிலும் கொடியேற்றுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது.  தெலங்கானா மாநிலத்தில் நியமிக்கப்பட்ட நிரந்தர ஆளுநர் தமிழிசை என்பதால் அவர் தெலங்கானாவில் கொடியேற்ற வேண்டும். புதுச்சேரியை பொறுத்தவரை முதல்வர் கொடியேற்றுவதற்குத் துணைநிலை ஆளுநர் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்றுத் தர வேண்டும்.

தமிழிசை விடியற்காலையில் ஒரு இடத்திலும், அதன்பிறகு புதுச்சேரியிலும் கொடியேற்றுகிறார். இதை போல் நடக்காலிருக்க  மத்திய அரசானது புதுவைக்கு நிரந்தர ஆளுநரை நியமித்து இருக்க வேண்டும்.  மத்திய அரசு இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.  முதல்வர் ரங்க்லசாமி.மாநில வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளிவிட்டு நிர்வாகத்தை ஆளுநரிடம் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்.  புதுவை அரசு ஒரு டம்மி அரசாகச் செயல்படுகிறது” என்று விமர்சித்துள்ளார்.

More articles

Latest article