பிரதமர் நரேந்திரமோடி நோட்டுத் தடையை அறிவிப்பதற்கு சரியாக நான்கு நாட்களுக்கு முன்பாக நவம்பர் 4-ஆம் தேதி பஞ்சாப்பை சேர்ந்த டாக்ஸி டிரைவரான பல்விந்தர் சிங்கின் வங்கிக்கணக்கில் ரூ.9,806 கோடி வரவு வைக்கப்பட்டிருக்கிறது!

taxi_driver

இது ஃப்ளிப் கார்ட் நிறுவனத்தின் கடந்த நிதியாண்டின் மொத்த வருமானத்துக்கு சமமான தொகையாகும்! தனது அக்கவுண்ட்டில் இவ்வளவு பெரிய பணத்தை போட்டது யார் என தெரியாமல் ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறார் பல்விந்தர். ஆனால் பாவம் அவரது கொண்டாட்டம் ஒருநாள் கூட நீடிக்கவில்லை. போட்ட பணம் மறுநாளே திரும்ப எடுக்கப்பட்டிருக்கிறது.

account1a

அவர் வைத்திருந்தது பிரதமரின் தன்ஜன் யோஜனா திட்டத்தின்படி தொடங்கப்பட்ட வங்கி கணக்கு ஆகும். இந்த விஷயத்தை சொல்லி வங்கி மேனேஜரிடம் கேட்டதற்கு வங்கி அதிகாரிகள் பதில் எதுவும் சொல்லாமல் அவரது பாஸ்புக்கை பிடுங்கி வைத்துக்கொண்டு, அதற்கு பதிலாக நவம்பர் 7-ஆம் தேதி வேறு ஒரு பாஸ்புக்கை கொடுத்திருக்கின்றனர். அந்த புதிய பாஸ்புக்கில் ரூ.9,806 கோடி வந்த விபரமும் மறுநாளே போன விபரமும் மிஸ்ஸிங்!

account1b

இதுபற்றி செய்தியாளர்கள் போய் விசாரித்த பொழுது வங்கியின் கிளை மேலாளர் ரவீந்தர் குமார் கொடுத்த தகவல் இதுபற்றி வருமான வரித்துறை விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.
வங்கியின் முதன்மை மேலாளர் சந்தீப் கார்க் கொடுத்த தகவலின்படி, வழக்கமாக அவரது பாஸ்புக்கில் கிரடிட் செய்யப்படும் 200 ரூபாய்க்கு பதிலாக துணை மேலாளர் வங்கியின் 11-இலக்க இன்டெர்னல் பேங்கிங் ஜெனரல் லெட்ஜர் அக்கவுண்ட் எண்ணை தவறுதலாக பதிவு செய்துவிட்டதாகவும் மறுநாள் அந்த தவறை கண்டுபிடித்து சரிசெய்ததாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை நடந்தது. இறுதியில் இந்த தகவலை துணை கமிஷனர் பூபிந்தர் சிங் ராய் உறுதிப்படுத்தியுள்ளார். இது தவறுதலாக நடந்ததுதான் பணம் எதுவும் அவரது அக்கவுண்ட்டில் போடப்படவில்லை என்று தெரிவித்தார்.