பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து கப்பலில் சிக்கியுள்ள 22 இந்திய தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய போர்க்கப்பல் ஈடுபட்டுள்ளது.

பாலஸ்தீனர்கள் மீதான இனப்படுகொலையை இஸ்ரேல் தொடர்ந்து வருவதை அடுத்து பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஹவுதி தீவிரவாதிகள் செங்கடல் வழியாக இஸ்ரேலை கடந்து செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடரும் இந்த தாக்குதலை அடுத்து ஏடன் வளைகுடா பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் பிரிட்டன் எண்ணெய் கப்பலான மார்லின் லாண்டா மீது ஹவுதி தீவிரவாதிகள் ட்ரான் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் கப்பல் தீப்பிடித்ததை அடுத்து ஆபத்து உதவிகோரி தகவல் அனுப்பப்பட்டது இதனையடுத்து உதவிக்கு விரைந்த இந்திய போர்க்கப்பல் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
தவிர கப்பலில் சிக்கியுள்ள 22 இந்திய பணியாளர்கள் மற்றும் ஒரு பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவரையும் மீட்டுள்ளது.
[youtube-feed feed=1]