டில்லி

ந்தியா கூட்டணியில் பிளவு ஏற்படுத்த பாஜக முயலுவதாக.காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது.

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ என்ற கூட்டணியை அமைத்துள்ளது. இக்கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சமீபத்தில் இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ,மேற்கு வங்கத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ஆயினும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பஞ்சாப்பில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்துள்ளது. மேலும் தனித்துப் போட்டியிட்டாலும் இந்தியா கூட்டணியில் தொடர்வதாக ப்ஞ்சாப் முதல்வர் பகவத்மான் தெரிவித்துள்ளார்.

பீகாரில் லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் நிதிஷ்குமார் முதல்வராகச் செயல்பட்டு வருகிறார். இந்தியா கூட்டணி அமைக்க நிதிஷ்குமார் முக்கிய பங்காற்றினார்.

தற்போது நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலக உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.   நிதிஷ்குமாருக்குப் பீகாரில் அவருடன் கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம்,

“பாஜக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் சிறு பிளவை ஏற்படுத்த முயல்கிறது. ஆயினும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்படவில்லை. மலிகார்ஜுன கார்கே நிதிஷ்குமாரை தொடர்புகொண்டு பேச முயன்று வருகிறார். 

ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் கார்கேவுடன் பேச முடியவில்லை என்று நிதிஷ்குமாரின் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜியும், நிதிஷ்குமாரும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் தொடர்ந்து இருப்பார்கள் என நம்புகிறேன்.”

என்று தெரிவித்துள்ளார்.