க்னோ

ரும் நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. 

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணிகள் சார்பில் நடந்த தொகுதி பங்கீட்டில் சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் வலைத்தளத்தில்,

“உத்தரப் பிரதேசத்தில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் 11 தொகுதிகளில் காங்கிரசுடன் சுமுக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெறும். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் நலனைக் கருத்தில் கொண்டு தேர்தல் வியூகம் வகுக்கப்படும்” 

என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே பீகார் முதல்-மந்திரியும் , ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார், மீண்டும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் திரும்பலாம் என்ற வலுவான அறிகுறிகளுக்கு மத்தியில் இந்த தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.