சென்னை: சென்னை பல்லாவரம் பகுதியில், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த 2 பேர்  கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொடூர சம்பவத்தை செய்த  8 பேர்  கொண்ட கும்பல் பிடிபட்டது;  விசாரணையில், கொலை செய்யப்பட்ட வர்களும், கொலையை செய்தவர்களும் ரவுடிகள் என்பது தெரிய வந்துள்ளது.

சென்னையில், போதை பொருள் நடமாட்டம் பெருகி உள்ளதால், கொலை, கொள்ளை சம்பவங்களும் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதுபோன்ற சட்டவிரோத செயல்களை செய்பவர்களில் பலர் அரசியல் கட்சிகளின் பின்புலத்துடன் இருப்பதால், அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை தயக்கம் காட்டுகிறது. இதனால், போதை பொருள் நடமாட்டம், கொலை போன்ற சம்பவங்களும் நாளுக்கு நாள்அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் முக்கிய பகுதிகளில் ஒன்றான  பல்லாவரம் அடுத்த திரிசூலம், துளசிங்க முதலியார் தெருவில் அமைந்துள்ள ஒரு வீட்டில், சம்பவத்தன்று  இரவு  இரண்டு  இளைஞர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் அங்கு வந்த மர்ம கும்பல்  கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் இருவரையும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை அறிந்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றனர். உடனே  இதுகுறித்து பொதுமக்கள் பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கொலையான இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் வரவழைத்து தடயங்கள் சேகரித்து  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. கொலை சம்பவம் நடந்த இடத்தை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த கொலை  தொடர்பான  முதல்கட்ட விசாரணையில்,  கொலை செய்யப்பட்ட இருவரும்  தாம்பரம் அடுத்த முடிச்சூர், எம்ஜிஆர் நகர் முதல் தெருவை சேர்ந்த ஆறு (எ) ஆறுமுகம் (21), முடிச்சூர் லெட்சுமி நகர், காந்தி தெருவை சேர்ந்த சதீஷ் (22) என்பதும், 2 பேரும் நண்பர்கள் எனவும் கூறப்படுகிறது. இவர்களில், ஆறுமுகம் மீது ஏற்கனவே பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில்  இருப்பதாக காவல்துறையினர் கூறி உள்ளனர். இவர்கள் ரவுடிகள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களை கொலை செய்த கும்பலும் ரவுடி கும்பல் என்பதும்,  தீபக் என்ற ரவுடி  தலைமையிலான 8 பேர் கும்பல், அவர்களை நோட்டமிட்டு பின் தொடர்ந்து சென்று,  அவர்  தூங்கிக் கொண்டிருந்த நேரம் பார்த்து, கொலை சம்பவத்தை அரங்கேற்றி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, தப்பிச்சென்ற கொலையாளிகளை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலம் அடையாளம் காண்பதற்காக போலீசார் ஆய்வு செய்து பார்த்தபோது, ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்து, கொலை சம்பவத்தை செய்ததும் தெரியவந்தது. மேலும், கொலைச் சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு தங்களது திட்டம் நல்லபடியாக நிறைவேற வேண்டி, சாமி கும்பிட்டுச் சென்றதும் சிசிடிவியில் தெளிவாக பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இருந்தது.

இதையடுத்து 4 தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை போலீசார், தாம்பரம் பகுதியில் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் கொலை சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே 8 பேரை கைது செய்து, அவர்களிடம் துருவித் துருவி விசாரணை நட

[youtube-feed feed=1]