rasi-weekly
மேஷம் குழந்தைகளுக்கு அரசாங்க நன்மைகள் உண்டு. வேலைக்குத் தயாராக உள்ள மகன் அல்லது மகளுக்கு அரசாங்க உத்யோகம் கிடைக்கும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். உறவினர் வீட்டு விN~சங்களில் கலந்து கொள்வீர்கள். நண்பர்கள் நல்லவர்களாக அமைந்து வழிகாட்டுவார்கள். கேட்ட கடன் கிடைக்கும். கிடைத்த கடனை விரைவாக அடைப்பீர்கள். மகன் அல்லது மகளின் காதலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வீர்கள். அறுவை சிகிச்சை நடக்குமோ என்று பயந்ததற்கு மாறாக வெறும் மருந்திலேயே நோய் குண மாகும். செயல்கள் வெற்றிபெறும். தொழில் நிலை சிறப்படையும். லாபம் அதிகரிக்கும். பொறுமை தேவை. பெண்களுக்கு வீட்டுச்செலவுக்கு போதுமான பணம் இருக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற நண்பர்கள் உதவுவர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
ரிஷபம் உத்தியோகம் காரணமாக பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டியிருக்கும். நிலம் வீடு தொடர்பான தொழில் சிறப்படையும். தாயாருக்கு அலுவலகத்தில் முன்னேற்றம் உண்டு. குழந்தைகளால் சந்தோ~ம் உண்டாகும். பெண்கள் குடும்ப நலனுக்கான திட்டங்களை சரிவர செயல்படுத்துவர். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். குடியிருக்கும் வீட்டை அலங்கரிபீர்கள். உழைப்பு அதிகரிக்கும். அசையா சொத்துகளில் இருந்த வில்லங்கம் தீர்வுபெறும். கணவன், மனைவி ஒற்றுமையால், குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் உயரும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் அறிவிப்பார்கள். தந்தைக்கு லாபமும் நன்மையும் கூடும். உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டு. சிவனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்யுங்கள்.
மிதுனம் பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். நெருப்பு மின்சாரம் தொடர்பான பொருட்களை கையாளும்பொழுது கவனம் தேவை. தாயாருக்கு நன்மை ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். புதிதாக வீடு வாங்குவீர்கள். மனக் குழப்பம் நீங்கும். உழைப்பு அதிகரிக்கும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரித்து மனநிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து லாபம் கூடும். பணியாளர்கள் தொழில் நுட்பங்களை ஆர்வமாக கற்று சலுகை பெறுவர். பெண்கள் நகை, புத்தாடை வாங்குவர். பணம் சேரும். மாணவர்கள் முயற்சியுடன் படித்து முன்னேற்றம் காண்பர். வாகனம் வாங்க உகந்த நேரம் இது. இதுவரை இருந்து வந்த ஆரோக்யப் பிரச்சனைகள் சரியாகும். திருக்கோயில் வழிபாடு சிறப்பைத்தரும். மகாலட்சுமி வழிபாடு, ஐஸ்வரியம் தரும்.
கடகம் தலைமைப் பதவி கிடைக்கும். உல்லாசப் பயணம் செல்வீர்கள். பண வரவு அதிகரிக்கும். வியாபார லாபம் அதிகரிக்கும். ஆரோக்யத்தை கெடுக்கும் எந்தப் பழக்கமும் வேண்டாம். குடும்ப சந்தோ~ம் அதிகரிக்கும். மனதில் தைரியம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். உடல்நலத்தில் சிறு பாதிப்பு வரலாம். கணவன், மனைவி அன்புடன் நடந்து கொள்வர். பயணங்களால் அதிக லாபம் வராது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்க தாமதமாகலாம். மாணவர்கள் படிப்பில் முன்னேற உரிய பயிற்சி பெறுவர். உறவினர்களிடம் சச்சரவு வேண்டாம். குழந்தைகளின் வாழ்வில் திடீர் நன்மைகள் நிகழும். விஷ்;ணு கோயிலில் விளக்கேற்றி வழிபடுவதுடன் துளசி மாலை சாத்துங்கள்.
சிம்மம் அலைச்சல் அதிகரிக்கும். வீடு நிலம் தொடர்பாக நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். வியாபாரம் விருத்தியாகும். நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாடு என்று தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருக்க வேண்டி வரலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். வாகனங்களை பராமரிப்பு செய்வீர்கள். உடலில் அசதி அதிகரிக்கும். கடன்கள் விரைவாக அடையும். நண்பர்களின் உதவி கிடைக்கும். பேச்சினால் நன்மைகள் ஏற்படும். பேச்சில் கருணை இருக்கும். பகைவர்களும் நண்பர்களாவார்கள். ஆடை அணிகலன்களுக்கான செலவுகள் அதிகரிக்கும். துர்க்கைக்கு ராகுகாலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள்.
கன்னி சம்பள உயர்வு கிடைக்கும். தந்தையின் வாழ்வில் சற்று நிதானமாக நன்மைகளையே எதிர் பார்க்கலாம். அண்ணன் தம்பி உறவு நிலை சிறப்படையும். வீண் அலைச்சல் உண்டாகும். எல்லா கஷ்டங்களும் நீங்கும். தந்தை அல்லது தந்தை வழி உறவினர்களுக்காக அதிகமாக செலவு செய்ய வேண்டி வரலாம். மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். வெளியூருக்கு பயணம் செய்யும் நிலை உண்டாகும். தேவையற்ற செலவுகளில் கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். நண்பர்கள் யார் பகைவர்கள் யார் நண்பன் போல் நடிப்பவர் யார் என்பதை நன்கு புரிந்துகொண்டு பழகுங்கள்.
> பெருமாள் வழிபாடு நன்மை தரும்.
துலாம் எல்லா செயல்களும் வெற்றியடையும். குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும். சுப நிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படுவதுபோல் தோன்றினாலும் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் ஜாக்கிரதையாக இருங்கள். வெளிநாட்டு வியாபரத் தொடர்புகள் நல்ல லாபத்தைத் தரும். எதிரிகளின் சூழ்ச்சிகளில் கவனமாக இருக்கவும். தொழில் லாபம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். எல்லா விஷயங்களிலும் தைரியமாக செயல்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதியவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்கவோ ஏற்கவோ வேண்டாம். கலைகள் மூலமாக வருமானம் வரும். வெளிநாட்டு வருமானம் கிடைக்கும். தந்தைவழியில் நன்மைகள் உண்டு. தட்சிணாமூர்த்தி வழிபாடு மங்கள வாழ்வு தரும்.
பரம்பரை தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகள் பற்றி இவ்வளவு காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து அவர்கள் வாழ்வு சிறந்து விளங்குவதால் மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். வருமானம் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வியாபாரம் மேன்மைநிலையடையும். வாகன யோகம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அம்மாவின் உதவி கிடைக்கும். நியாயமான தைரியமும் தன்னம்பிக்கையும் ஏற்படும். எதிலும் சற்று நிதானமாக இருக்கவும். பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நேரம் இது. துர்க்கை வழிபாடு தைரியம் தரும்.
தனுசு சகோதரர்களுக்காக செலவுகள் செய்வீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சொந்த தொழிலில் சிறப்பு நிலை உண்டாகும். தாயாரிடம் நன்கு இணங்கிப் போக வேண்டிய தருணம் இது. தாயாரின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். பெரிய முயற்சிகளில் இப்போதைக்கு இறங்க வேண்டாம். தொழில் முன்னேற்றம் நீங்கள் எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் நிதி நிலையில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. அதாவது, லாபம் அதிகம் வராவிட்டாலும் நஷ்டம் ஏற்படாது. குல தெய்வ அருள் கிடைக்கும். தூர தேச பயணம் உண்டாகும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பக்கத்து ஊருக்கு பயணம் செல்லும் நிலை உண்டாகும். சிவன் வழிபாடு சிரமம் நீக்கும்.
மகரம்தொழிலுக்கு புதிதாக இயந்திரங்கள் வாங்குவீர்கள். தாய்மாமனிடம் சச்சரவு செய்யாதீர்கள். புனித யாத்திரை செல்வீர்கள். விலையுயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும். பண வரவு அதிகரிக்கும். உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும். மனதிலிருந்த வீணான சிந்தனைகள் அழியும். மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற கருணை மனதில் பெருகும். சகோதர சகோதரிகளுக்கு உங்களாலும் உங்களுக்கு அவர்களாலும் நன்மை உண்டாகும். இயந்திரங்கள், எண்ணெய், இரும்பு போன்ற வகைகளில் திடீர் லாபம் வரும். பல நாட்கள் தடைப்பட்டிருந்த பிரார்த்தனைகள் நிறைவேறும். செவ்வாய்க் கிழமை துர்க்கையை வழிபடுங்கள்.
கும்பம் நண்பர்கள் எதிரிகளாக மாறுவார்கள். தொழிலில் மேன்மை நிலை உண்டாகும். ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். மனதில் தீய எண்ணங்கள் ஏற்படாமல் தடை செய்து கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. காதல் கைகூடும். இதே காரணத்தினால் கணவன்-மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நல்லுறவு நிலவும். ஜீரண சம்பந்தமான சிறு உபாதைகள் ஏற்படக்கூடும். நீங்கள் விரும்பும் உத்யோகம் கிடைப்பதில் சிறு தடைகள் ஏற்படலாம். ஆனால், திடீர் நன்மைகள் உண்டு. பெண்களால் அதிர்ஷடம் அதிகரிக்கும். உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்கவும். விநாயகருக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்யுங்கள்.
மீனம் தொழிலில் அப்பாவின் உதவி கிடைக்கும். தாய் மாமனுடன் சச்சரவைத் தவிர்க்கவும். உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும். இவ்வளவு காலமாகத் தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் ஏற்பாடாகும். பல காலமாக முடியாமல் போய்க்கொண்டிருந்த பிரார்த்தனைகள் உடனடியாக நிறைவேறும். பயணங்களெல்லாம் கோயில்களை நோக்கியே இருக்கும். நண்பர்கள் அதிகரிப்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு செய்ய வேண்டாம். பூர்வீக சொத்துக்காக செலவுகள் உண்டாகும். எதிரிகளை வெல்வீர். தெய்வீக செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய அவசியம் வரும். சனிக்கிழமை நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிப்படவும்.

கணித்தவர்” ஜோதிடரத்னா” மிதுன கணேசன்