ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன்: இறுதிச்சுற்றில் சமீர் வர்மா, பி.வி.சிந்து தோல்வி

Must read

pv-sindhu-sameer-vermaஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் இறுதிப்போட்டியில் நுழைந்த இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் தோல்வியை தழுவி உள்ளனர்.

நேற்று, ஹாங்காங்கின் கோவ்லூன் நகரில், மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் 15-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்துவை சீன தைபேவின் தாய் சூ இங் வீழ்த்தினார்.

அதேபோல் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இந்தியா வீரர் சமீர் வர்மா
14-21, 21-10, 11-21 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் லாங் ஆக்னஸிடம் தோல்வியை தழுவினார்.

More articles

Latest article