51வது முறையாக பந்தாடப்படும் நேர்மை அதிகாரி

சண்டிகர்:

ஹரியானவை சேர்ந்த 52 வயது ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா. இவர் தனது பதவி காலத்தில் 51 முறை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஹரியானாவை சேர்ந்த அசோக் கெம்கா மிகவும் நேர்மையான ஐ.ஏஎஸ் அதிகாரியாக அறியப்படுவர். இவர் தனது 52 வயதிற்குள் 51 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஹரியானாவில் எந்த அரசு வந்தாலும் இவர் பந்தாடப்படுவது வழக்கம். தற்போது பாரதீய ஜனதாவால் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

கெம்கா தனது 51வது இடமாற்றம் குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், ‘‘பணி மிகவும் திட்டமிட்டது. மற்றொரு இடமாற்ற செய்தி. மறுபடியும் ஒரு விபத்து ஆனால் இது தற்காலிகமானது. புதுப்பிக்கப்பட்ட வீரியமும் ஆற்றலும் தொடரும்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஹரியானா பாஜக முதல்வர் மனோகர் லால் கத்தார் அரசால் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இவர் ஹரியானா விளையாட்டு அமைச்சர் அனில் விஜ் கீழ் செயல்பட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறைகளில் பிரதான செயலாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
English Summary
honest ias officer transferred fot 51th time