புதுடெல்லி:

ஓராண்டுக்கு மேலாக கட்டுமான நிறுவனத்தினர் வீட்டை ஒப்படைக்காவிட்டால், கட்டிய தொகையை திரும்பப் பெறும் உரிமை பணம் செலுத்தியவர்களுக்கு உண்டு என நுகர்வோர் ஆணையம் கூறியுள்ளது.


அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோர், கட்டுமான நிறுவனத்திடம் முன்பணமாக பல லட்சங்களை கொடுக்கின்றனர்.

ஆனால், காலவரையற்று காலதாமதம் ஆவதால் வீடு வாங்குவோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம் முதல் கீழ் நீதிமன்றங்கள் வரை, வீட்டை ஒப்படைக்க கட்டுமான நிறுவனத்தினர் தாமதம் செய்தால், செலுத்திய பணத்தை திரும்பப் பெறலாம் என தீர்ப்பளித்துள்ளன.

இந்நிலையில், தேசிய நுகர்வோர் ஆணையமும், வீட்டை வாங்கியோருக்கு வீட்டை ஒப்படைக்க ஓராண்டுக்கு மேல் தாமதம் ஆனால், செலுத்திய தொகையை கட்டுமான நிறுவனத்திடமிருந்து பெற உரிமை உண்டு என கூறியுள்ளது.

இதனால், பணத்தை கட்டிவிட்டு வீடு கிடைக்காமல் பல ஆண்டுகள் காத்திருக்கும் லட்சக்கணக்கானோர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.