வாரணாசி:

பிரச்சார கூட்டத்தில் மயங்கி விழுந்தவரை காப்பாற்ற ட்ரக்கிலிருந்து குதித்தார் பிரியங்கா காந்தி.


உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

புதன்கிழமை மாலை வாரணாசியில் நடைபெற்ற ஒரு பேரணியில் பங்கேற்ற அவர், ட்ரக்கில் இருந்தவாறே பேசிக் கொண்டிருந்தார்.

மயங்கி விழுவதை பார்த்த அவர், உடனடியாக ட்ரக்கில் இருந்து கீழே குதித்தார்.

அவர் அருகே சென்று, நெஞ்சு வலிப்பதாகக் கூறிய அவருக்கு, தன்னிடம் இருந்த குடிநீரை கொடுத்தார்.
பின்னர், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கார் ஒன்றை ஏற்பாடு செய்த பிரியங்கா காந்தி, மயங்கி விழுந்தவரை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தார்.

பின்னர் தன் பிரச்சாரப்பயணத்தை தொடர்ந்தார்.
பிரியங்காவின் செயல் அங்கிருந்தோரை வெகுவாகக் கவர்ந்தது.

அதேபோல் மூளைக் கட்டி நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற பிரியங்கா காந்தி உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சை அளிக்க வசதியில்லை என்று சிறுமியின் பெற்றோர் கோரிக்கை விடுத்ததையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா மூலம் அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்க பிரியங்கா நடவடிக்கை மேற்கொண்டார்.