பெங்களூரு: மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்பதால் யாரும பெங்களூருவை விட்டு போகவேண்டாம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறி உள்ளார்.
பெங்களூருவில் குறைவாக காணப்பட்ட கொரோனா பாதிப்பு, ஊரடங்கு தளர்வுகள் மேகமெடுத்துள்ளது. நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கில் இருநத தொற்று, தற்போது ஆயிரக்கணக்கில் பதிவாகத் துவங்கியுள்ளது.
அதை கட்டுப்படுத்தும் நோக்கில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பெங்களூருவில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர், சொந்த ஊர்களை நோக்கி பயணித்தனர். இது குறித்து உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:
இன்னொரு முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் என்ற பயத்தினால் பெங்களூருவில் வசிக்கும் நிறைய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முயல்கின்றனர். இங்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது.
அதை முதலமைச்சர் தெளிவாக கூறி விட்டார். எனவே யாரும் பெங்களூருவை விட்டு வெளியில் செல்ல வேண்டாம். அனைவரும் தற்போது இருக்கிற அதே இடத்திலேயே இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.