சென்னை; 1 – 5 ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளுக்க  இனி சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறிது  பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகள் கல்வி நிலையங்கள் மூலப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் போதிக்கப்பட்டதால், குழந்தைகளின் கல்வியறிவில் முன்னேற்றம் காணப்படவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு ந வம்பர் 1 ஆம் தேதி முதல் 1 ஆம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளின் நேர்முக வகுப்புகளுக்கு மாணாக்கர்கள் வந்துகொண்டிருக்கினறனர்.  வாரத்தின் 6 நாட்களும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறன.  இருந்தாலும் கொளுத்தும் வெயிலை குழந்தைகள் தாக்குபிடிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோரகள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து,   அரசு பரிசீலனை செய்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை  தெரிவித்திருக்கிறது. பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று இனி  சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.